சமவசரணச்சருக்கம்569


Meru Mandirapuranam
 

மட்டியா - பூசி, விழு - பெரிதாகிய, குணமணி - ஸம்மியக் ஞானாதி
குணங்களாகிய   ரத்தினாபரணங்களை,   மேனி  -    சரீரங்களில்,
சேர்த்தினார் - அணிந்தவர்களாகி, தொழில் தொடை - எல்லையாகச்
சேர்ந்த    தொழிலென்னும்,   சீலமாலை  -     சீலாச்சாரமென்னும்
பூமாலைகளையும்,  சூடினார்  - (அவர்கள்) அணிந்துகொண்டார்கள்,
எ-று. (161)

 1209. விதிமனர் தமைவெல வந்த கேவலத்
      ததிபதி தனக்கிள வரச ராக நற்
      சுதமலி கேவல பட்டஞ் சூடினார்
      விதியினா லிறைவனை வந்தி றைஞ்சினார்.

   (இ-ள்.)   விதிமனர்   தமை  -   கருமங்களாகிற  அரசர்களை
யெல்லாம், வெல - ஜயிக்க, வந்த - வரப்பட்ட, கேவலத்து - கேவல
ஞானத்தையுடைய, அதிபதி தனக்கு - ஜினேந்திரனுக்கு, இளவரசராக
- யுவராஜபத   முடையவர்களாக,   நல் -  நன்மையான,   சுதமலி
ஸ்ரீதஞான   ஸம்பூர்ணமாகிய,   கேவலபட்டம்   -  சுருத  கேவலி
பட்டத்தை,   சூடினார்   -   அணிந்தவர்களாகி,     விதியினால் -
கிரமத்தினால், வந்து -  ஸ்வாமியின் அபிமுகமாக வந்து, இறைவனை
- ஜினேந்திரனாகிய  நாதனை,  இறைஞ்சினார் -   வணங்கினார்கள்,
எ-று. (162)

 1210. இறைவநின் னடியடை யுலகி யற்கையும்
      பெறுபொரு ளளவையும் பிழைத்த நீதியும்
      மறவினை மனமிக வருதற் கேதுவும்
      பிறவியின் விகற்பமும் வீட்டின் பெற்றியும்.

   (இ-ள்.)  (அவ்வாறு  வணங்கியவர்கள்),  இறைவ  - ஸ்வாமியே!,
நின்  -  உன்னுடைய,  அடி -   பாதத்திலே, அடை - அடைகின்ற,
உலகு - லோகத்தினுடைய,  இயற்கையும்  -  ஸ்வரூபமும்,  பெறு -
அவ்வுலகத்திலடைந் திராநின்ற, பொருள் -   ஜீவாதி பொருள்களின்,
அளவையும் -    அவற்றைப்     பிரமாணித்து    அறியும்படியான
ஞானப்பிரமாணமும்,    பிழைத்த    நீதியும்    -         அதற்கு
மாறாகியமித்தியாமார்க்கமும்,  மறவினை - பாபவினைகள்,  மனம் -
மனோ பரிணாமத்தால்,  மிக  - மிகுதியாக, வருதற்கு - ஆத்மனிடம்
வந்து   சேர்ந்து   பந்திப்பதற்கு,    ஏதுவும்   -     காரணமாகிய
பரிணாமத்தையும், பிறவியின் - ஸம்ஸாரத்தினது, விகற்பமும் - பிறப்பு
விகற்பங்களையும்,    வீட்டின்   -   மோக்ஷத்தின்,    பெற்றியும் -
பெருமையையும், எ-று. (163)

 1211. அருளென விறைஞ்சலு மணிக்1கட் டின்புற
      முரசுநின் றதிர்வதி னெழுந்து கேவலத்