570மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   திருவிடு தூதிபோல் செஞ்2சொல் வல்லிதான்
   மருவினாண் முனிவர்தம் மனத்த கத்தையே.

   (இ-ள்.)   அருளென   -    ங்களுக்கு    அருளிச்   செய்ய
வேண்டுமென்று,  இறைஞ்சலும்  -  மேலும்  வணங்கவும்,   அணி -
அழகிய,    கட்டு -  (மேளக்கட்டாகும்படி    வாரினால்   விகிந்து
கட்டப்பட்ட)  கட்டையுடைய,  முரசு  -  பேரிகையானது,  இன்புற -
கேட்பவர்    இனிமையடையும்படி,   நின்று  -   தளராமல்  நின்று,
அதிர்வதின்  -  சப்திப்பதுபோல,  எழுந்து  -    திவ்யத்வனியானது
உண்டாகி,  கேவலத்திருவிடும்  -  கேவலஞானமாகிய   லக்ஷ்மியால்
அனுப்பப்பட்ட,    தூதிபோல்   -   தூதுசெல்பவள்போல,  செம் -
செவ்விதாகிய, சொல்வல்லிதான் - ஸரஸ்வதி தேவியானவள், முனிவர்
தம்  -  இம்மேருமந்தரரென்கிற  முனிவர்களுடைய, மனத்தகத்தை -
மனத்தினிடத்தை,  மருவினாள்  -  சேர்ந்தாள், எ-று.

   இங்ஙனங் கூறியதனால், அவர்கள், ஸ்ரீுதஞான ஸம்பூர்ணர்களாகிக்
கணதர பதவியை யடைந்தார்கள் என்பது பெறப்படும்.

   1கட்டிப்புற என்றும் பாடம் 2 சொல்வஞ்சிதான் - என்றும் பாடம்.
(164)

 1212. ஒருதிரு மொழியுமே பதினெண் பாடையாய்
     மருவிய தோசனை மிகுதி மண்டலத்
     தருகிடை முடிவத னகத்த வர்க்கெலா
     மொருவகை யாலினி தாயொ லித்ததே.

     (இ-ள்.)    ஒரு        திருமொழியுமே    -       ஒப்பற்ற
திவ்யத்வனியொன்றே,  பதினெண்பாடையாய் -  பதினெட்டு விதமான
பாஷைகளாக, மருவியது  -  சேர்ந்திராநின்றதாகி,  ஓசனை மிகுதி -
பன்னிரண்டு   யோஜனை   விஸ்தீர்ணத்தையுடைய,  மண்டலத்து -
ஸமவஸரண மண்டலத்தில்,  அருகு - பக்கத்திலுள்ளவர்க்கும், இடை
- நடுவிலுள்ளவர்களுக்கும்,  முடிவு  -   கடைசியிலுள்ளவர்களுக்கும்,
அதனகத்தவர்க்கெலாம்         -     இப்படியாக          அச்
சமவஸரணத்திலிருப்பவர்களுக்கெலாம்,   ஒருவகையால்  -    ஒரே
தன்மையால்,   (கேட்கும்படியானதாகி), இனி தாய் - யாவர்களுக்கும்
இனிமையாக, ஒலித்தது - சப்தித்தது, எ-று. (165)

 1213. வினவிய பொருளெலாம் விழுங்கி மெய்த்தவர்
     மனம்வலி மொழிவழி வாங்கி யப்பொரு
     டனித்தனி யாகம்நாற் பத்தி ரண்டதாய்
     முனிவறச் செய்துமா முனிவர்க் கோதினார்.

   (இ-ள்.)  மெய்த்தவர்  -   உண்மையாகிய   தபோதனர்களாகிய
இம்மேருமந்தரரென்கிற    கணதரர்   பதவியைப்   பெற்ற    சுருத
கேவலிகளிருவரும், வினவிய -