சமவசரணச்சருக்கம்571


Meru Mandirapuranam
 

தங்களால்  பகவானை  பிரசினை  பண்ணப்பட்ட, பொருளெலாம் -
பொருள்களையெல்லாம்,    மனம்   வலி  -    மனோபலமென்னும்
ரித்தியதிசயத்தால்  சுருத  ஞானோதயமாக, விழுங்கி - உட்கொண்டு,
மொழி வழி - (வசனமாக வரும்படியாகச் செய்து) அவ்வசன வழியாக,
அப்பொருள்   -  அந்த  பிரசினையின்  பொருள்களை,  வாங்கி -
கிரஹித்து, தனித்தனி - தனித்தனியாக, ஆகம் நாற்பத்திரண்டதாய் -
நாற்பத்திரண்டு பரமாகமங்களாக,  முனிவற  -  குற்றமற,  செய்து -
கிரந்தமாகச் செய்து, மாமுனிவர்க்கு  - மஹா முனிவர்கள் முதலாகிய
கோஷ்டத்திலிருந்து கேட்கப்பட்டவர்களுக்கு,  ஓதினார்  -  அடியில்
வருமாறு சொல்லினார்கள், எ-று.

      ‘ஆகமம்? என்பது, ‘ஆகம்? எனத் திரிந்து வந்தது. (166)

 1214. முடிவிடை யகலமா யதமொன் றேழ்முழ
     விடையினைங் கயிறகன் றேழு நீளமா
     யடியினே ழகன்றுநீண் டுயரமீ ரேழுமாய்
     வடிவுடை யுலகமூ வாதஞ் சூழ்ந்ததே.

   (இ-ள்.)   முடிவு -  (லோகத்தினுடைய) உச்சியிலேயும், இடை -
மத்திம லோகத்திலேயும்,  அகலம் - பூர்வாபரவகலமானது, ஒன்று -
ஒரு கயிறாகும், ஆயதம் - தக்ஷிணோத்திரத்தில், (நீளமானது), ஏழ் -
ஏழு    கயிறாகும்,  முழவு   -   மத்தளம்   போல,  இடையின்  -
(மத்திமலோகத்துக்கும்  லோகாக்கிரத்துக்கும்)  மத்தியில், (அதாவது :
பிரம்மகல்பாந்தியத்தில்),   ஐங்கயிறகன்று  -   பூர்வாபரம்    ஐந்து
கயிறகலமாகி,  ஏழு  நீளமாய்  -  ஏழு  கயிறு நீளமாகி, அடியின் -
லோகத்தினுடைய அடியிலே,  ஏழகன்று - ஏழுகயிறகலமாகி, நீண்டு -
ஏழு   கயிறு   நீளமாகி,  உயரம்  -  லோகத்தின்  உன்னதமானது,
ஈரேழுமாய்  -  பதினாலு  கயிறு  உன்னதமாகி,  வடிவுடை - இந்த
ஸ்வரூபத்தையுடைய, உலகம் - லோகமானது, மூவாதம் - (கனோததி,
கனவாத,  தனுவாத  மென்கிற)  மூன்று  வாதங்களால்,  சூழ்ந்தது -
பரிவேஷ்டித்திரா நின்றது, எ-று. (167)

 1215. முழஞ்சிலை காவத மேழ்மு டிந்துழி
     முழஞ்சிலை காவத மூன்று வீழ்ந்தொர்பா
     லெழுந்திவ்வா றெழுகயி றெய்தச் சென்றிடை
     விழுந்தவா றொழிந்ததொன் றாகு மேன்முகம்.

     (இ-ள்.)    முழம்     -     முழத்தினாலாவது,     சிலை -
வில்லினாலாவது,   காவதம்   - காதத்தினாலாவது, ஏழ் முடிந்துழி -
ஏழுசென்ற  விடத்தில்,  முழம்  - முழமாவது, சிலை - வில்லிலாவது,
காவதம் - காதமாவது, ஓர் பால் -  ஒரு பக்கத்துக்கு, மூன்று வீழ்ந்து
- மூன்று  மூன்றாகக்  குறைந்து,  இவ்வாறு  -  இந்தப் பிரகாரமாக,
எழுந்து - (ஏழுகயிறகன்ற லோகத்தினுடைய அடியினின்றும்) எழுந்து,
ஏழுகயி