களில், உறை -
முதலில் தங்கி யிராநின்ற, அசுரருக்கு - அசுர
குமாரர்களுக்கு, ஆயு - உத்கிருஷ்டாயுஷ்யமானது,
வான்கடல் -
சிறந்த ஒரு கடற்காலமாகும், உவமையில் - உபமையில்லாத, தனு -
(அவர்கள்) சரீர உன்னதத்தில், தனுவையைந்து -
இருபத்தைந்து
வில்லு, ஓங்கினார் - உயரமானார்கள், எ-று. (177)
1225. பல்லமூன் றிரண்டரை யிரண்டு மூவரை
சொல்லிய நாகர்நற் சுவணர்
தீவரோ
டல்லவ ரறுவர்க்கு மாயு நாகர்க்கு
வில்லுமூ வைந்துமே லவர்க்கீ ரைந்துமாம்.
(இ-ள்.)
சொல்லிய - சொல்லப்பட்ட,
நாகர் - நாக
குமாரர்களுக்கு, பல்ல மூன்று
- மூன்று பல்லமும், நல் -
நன்மையாகிய, சுவணர் - ஸ்வர்ண குமாரர்களுக்கு, இரண்டரை -
இரண்டரைப் பல்லமும், தீவர் - தீப
குமாரர்களுக்கு, இரண்டு -
இரண்டு பல்லமும், அல்லவர்
- இவர்களல்லாதவர்களாகிய,
அறுவர்க்கும் - ஆறு தரத்தார்களுக்கும்,
மூவரை - ஒன்றரை
ஒன்றரைப் பல்லமும், ஆயு - உத்கிருஷ்ட
ஆயுஷ்யங்களாகும்,
நாகர்க்கு - நாக குமாரர்களுக்கு, வில்லு மூவைந்து
- பதினைந்து
வில்லு உன்னதமும்,
மேலவர்க்கு -
இவர்களல்லாத
எட்டுத்தரத்தார்க்கு, ஈரைந்து - பத்துப் பத்து வில்லு, ஆம் - சரீர
உத்ஸேதங்களாகும், எ-று. (178)
1226. மானவ ருறைவிடம் மந்த ரத்தினைத்
தானடு வுடையது தீப சாகர
மூனமி லிரண்டரை யிரண்டு மாய்ப்புகை
தானவற் றிடையொன்பத் தைந்து
லக்கமாம். (இ-ள்.)
மானவர் - மனுஷ்யர்கள், உறை - தங்கியிராநின்ற,
இடம் - ஸ்தானமானதூ, மந்தரத்தினைதான்
- மந்தர பர்வதத்தை,
நடுவுடையது - நடுவேயுடைத்தானதாகி, ஊனமில் - குற்றமில்லாத,
இரண்டரைத் தீபம் - இரண்டரைத்வீபமும், இரண்டு
சாகரம் -
இரண்டு சமுத்திரமும், ஆய் -
ஆகி, அவற்றிடை - இந்த
இரண்டரைத்வீப இரண்டு ஸமுத்திரங்களின் மத்திய விஸ்தீர்ணமானது,
ஒன்பத்தைந்து லக்கம் புகைதான்
- நாற்பத்தைந்து லட்சம் யோஜனைகள்தான், ஆம் - ஆகும், எ-று. (179)
வேறு.
1227. ஆரியர் மிலேச்ச ராவார் மானவ ரறத்தை யோர்வா
ராரியர் தரும கண்டம் நூற்றெழு பத்தி னாவார்
வாரியுட் டீவு தொண்ணூற் றாறுமற்
றைக்கண் டத்துஞ்
சேருந ரறத்தைச் சேரார் மிலேச்சராய்ச் செப்பப் பட்டார்.
|