சமவசரணச்சருக்கம்577


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)   பவணர்தாங்கள்   -   மானவர்கள்  - மனுஷ்யர்கள்,
ஆரியர் -  ஆரிய  மனுஷ்யர்களென்றும்,   மிலேச்சர்  -   மிலேச்ச
மனுஷ்யர்களென்றும்,   ஆவார்   -    இரண்டு     தரமாவார்கள்,
அறத்தையோர்வார் -  தருமத்தையறிந்து  கைக்    கொள்பவராகிய,
ஆரியர் - ஆரிய மனுஷ்யர்கள், தரும கண்டம் நூற்றெழுபத்தினாவார்
-  நூற்றெழுபது  தரும  கண்டங்களிலே  பிறப்பார்கள்,  வாரியுள் -
(மஹாலவணம்,  காளோதகம்,  என்னும் இரண்டு) ஸமுத்திரங்களிலும்
உள்ள,    தீவு      தொண்ணூற்றாறு     -      தொண்ணூற்றாறு
அந்தரத்வீபங்களிலும்,  மற்றைத்  கண்டத்தும் -  மற்றையைந்தைந்து
மிலேச்சகண்டங்களிலும்,   சேருநர்   -   சேர்ந்திரா   நின்றவர்கள்,
அறத்தைச்  சேரார்  -   தருமத்தைச்   சேராதவர்கள் (ஆகையால்),
மிலேச்சராய்  -   மிலேச்ச   மனுஷ்யர்களாக,    செப்பப்பட்டார் -
பரமாகமத்தில் சொல்லப்பட்டார்கள், எ-று. (180)

 1228. ஒன்றதாங் காலர் வாலர் கொம்பர்தாழ் செவியர் சீயம்
     பன்றிமான் குரங்கு கீரி யொட்டகங் கரடி யாதி
     ஒன்றலா முகத்தர் பல்ல மாயுகங் காத மோக்கந்
     தின்றிடா பழத்தை மண்ணை முழஞ்சிலும் மரத்துஞ் சேர்வார்.

   (இ-ள்.)    (அந்தரத்வீப    வாஸிகளாகிய      மனுஷ்யர்கள்),
ஒன்றதாங்காலர்  -  ஒருகால்  மனுஷ்யர்களாகவும்,  வாலர்  - வால்
மனுஷ்யர்களாகவும், கொம்பர் -   கொம்பு மனுஷ்யர்களாகவும், தாழ்
செவியர் - நீண்டகாதுடையவர்களாகவும், சீயம் - சிம்மமுகமும், பன்றி
- பன்றிமுகமும், மான் - மான்முகமும், குரங்கு - வானரமுகமும், கீரி
- கீரிமுகமும், ஒட்டகம் - ஒட்டை   முகமும், கரடி - கரடி முகமும்,
ஆதி   -  முதலாக,  ஒன்றலா -  மனுஷ்யர்களுக்குப்  பொருந்தாத,
முகத்தர்  -  முகத்தையுடையவர்களாகவும்,  பல்லமாயுகம்  -   ஒரு
பல்லமாயுஷ்யத்தையுடையவர்களாகவும்,          காதமோக்கம்   -
இரண்டாயிரம்    வில்லுன்னதத்தையுடையவர்களாகவும்,  பழத்தை -
பழங்களையும்,  மண்ணை  -  அத்வீபங்களிலுள்ள    தித்திப்பாகிய
மண்ணையும், தின்றிடா -  ஆஹாரமாகப்  பொசித்து, முழஞ்சிலும் -
பர்வத குகைகளிலும்,  மரத்தும்  -  விருட்சங்களிலும்,   சேர்வார் -
சேர்ந்து வாசம் பண்ணுவார்கள், எ-று. (181)

வேறு.

 1229. இமையமா லிமையமும் நிடத நீலியுஞ்
     சிமையநல் லுருக்கியுஞ் சிகரி யாமலை
     தமைநடு வுடையவேழ் நாடி வற்றினுட்
     சமையமா றுடையவாம் பரத ரேவதம்.

    (இ-ள்.)   இமையம் - ஹிமவான் பர்வதமும், மாலிமையமும் -
மஹாஹிமவான்  பர்வதமும்,  நிடதம் - நிஷதி பர்வதமும், நீலியும் -
நீலிபர்வதமும், சிமை -