மைகளையுடைய, இரமை -
ரம்மியாவும், சுரமை - ஸுரம்மியாவும்,
தோமிலா - குற்றமில்லாத, மன்னர் -
ரர்ஜாக்களினாலே, மன் -
சேர்ந்திராநின்ற, ரமணியம் -
ரமணீயாவும், மங்கலாவதி -
மங்கலாவதியுமாகும், எ-று.
ஏகாரங்கள் எண்ணுப் பொருளன. (192)
1240. பரவரும் பதுமைநற் பதுமை மாபதம்
மருவுமப் பதுமையே பதும காவதி
திரிவினற் சங்கையே நளினை
சீதுதைக்
கரையதென் குமுதையே சரிதை காண்வரில்.
(இ-ள்.)
காண்வரில் - பார்க்குமிடத்தில், சீதுதை
-
சீதோதாநதியினுடைய, கரையதென் - தென்கரையில்
உள்ளவை,
பரவரும் - சொல்லுதற்கரிய, பதுமை -
பத்மாவும், நற்பதுமை -
ஸூபத்மாவும், மாபதம் - மஹாவென்னும்
பதத்தை, மருவும் -
சேர்ந்திராநின்ற, அப்பதுமை - அந்தப் பதுமையும் (அதாவது :
மஹா
பத்மாவும்), பதுமகாவதி - பத்மாகாவதியும், திரிவில் - கெடுதலில்லாத,
நல் - நன்மையாகிய, சங்கை - சங்காவும், நளினை
- சங்காவும்,
நளினை - நளினாவும், குமுதை -
குமுதாவும், சரிதை -
ஸரிதாவுமாகும், எ-று. (193)
1241. வடதடத் தின்வப்பை நல்ல
வப்பையு
மிடரிலா மாவப்பை வப்ப காவதி
சுடருடைக் கந்தையே சுகந்தை தோமிலாக்
கடலுடைக் கந்திலை கந்த மாலினி. (இ-ள்.)
வடதடத்தின் - ஸீதோதா
நதியினுடைய
வடகரையில், வப்பை - வப்ராவும், நல்ல வப்பையும் - ஸுவப்ராவும்,
இடரிலா - துன்பமில்லாத -
மாவப்பை - மஹாவப்ராவும்,
வப்பகாவதி - வப்ரகாவதியும், சுடருடை - பிரகாசம் பொருந்திய,
கந்தை - கந்தாவும், சுகந்தை
- ஸுகந்தாவும், தோமிலா -
குற்றமில்லாத, கடல் - ஸமுத்திரத்தை,
உடை - உடைத்தாகிய,
கந்திலை - கந்திலாவும், கந்தமாலினி - கந்தமாலினியுமாகும், எ-று. (194)
வேறு.
1242. நாலுமுன் னதியினும் நாலுநால் வரையினும்
நாலுநா லிரட்டியாய் விதேகநாடு நின்றவே.
(இ-ள்.) நாலுமுன்னதியினும் -
நால்மூன்று பன்னிரண்டாகிய
விபங்கநதிகளாலும், நாலுநால் வரையினும்
- நால்நான்கு
பதினாறாகிய வக்ஷாரபர்வதங்
|