1247. ஒன்றினொன் றிரட்டியாய்ச் சென்றதீபஞ் சாகரம்
மன்றன மலைப்புறத்து நின்றவா றியம்புவாம்.
(இ-ள்.)
ஒன்றினொன்றிரட்டியாய்
- ஒன்றுக்கொன்று
இரட்டித்த இரட்டித்த விஸ்தீர்ணமுடையனவாகி,
சென்ற -
ஒன்றையொன்று சூழ்ந்து
அடைந்திராநின்ற,
தீபம் -
அஸங்கியாதத்வீபங்களும், சாகரம் - அஸங்கியாத ஸமுத்திரங்களும்,
மன்றனமலை - மானுஷோத்தர பர்வத்தின், புறத்து - பாஹ்யத்திலே,
நின்றவாறு - இராநின்ற விதத்தை,
இயம்புவாம் - இனிச்
சொல்லுவோம், எ-று.
1248. இருபத்தைந்து கோடாகோடி யாமுத்தார பல்லங்கட்
குரியரோம மெண்ணவாந் தெரியுந்தீபஞ் சாகரம்.
(இ-ள்.)
தெரியும் - விளங்குகின்ற,
தீபம் -
அஸங்கியாதத்வீபங்களும், சாகரம் - அஸங்கியாத சமுத்திரங்களும்,
(எவ்வளவென்று கேட்டால்), இருபத்தைந்து
கோடா கோடியாம் -
இருபத்தைந்து கோடாகோடியாகிய, உத்தார பல்லங்கட்கு -
உத்தார
பல்லங்களுக்கு, உரிய - உரித்தாகிய,
ரோமம் - மயிர்களின்,
எண்ணவாம் - எண்ணிக்கையையுடையனவாம், எ-று (201)
1249. உவரிதண்ணீர் தேன்சுரைத் திவருபானெ யிக்குவின்
சுவையநீரின் வாரிக ளவையுமேழ தாகுமே.
(இ-ள்.) உவரி - உப்புஜலத்தையுடைய ஸமுத்திரமும்,
தண்ணீர்
- சுத்தஜலத்தையுடைய ஸமுத்திரமும், தேன்
- மதுபோல
ஜலத்தையுடைய ஸமுத்திரமும், சுரைத்து - கள்ளுப்போன்ற
ஜலமுள்ள
ஸமுத்திரமும், இவரு - விரும்புகின்ற, பால் - பால் ஸமுத்திரமும்,
நெய் - நெய் ஸமுத்திரமும், இக்கு - இட்சுரஸஸமுத்திரமும், (ஆகிய)
ஏழது - ஏழும், ஆகும் - ஏழுவிதமாகிய ஜலஸ்வாதுக்களையுடைய
ஸமுத்திரங்களாகும், வாரிகளவையும்
- மற்ற அஸங்கியாத
ஸமுத்திரங்களெல்லாம், நீரின் இன்சுவைய
- இட்சுரஸமாகிற
ஜலஸ்வாதுவையுடைய ஸமுத்திரங்களாகும், எ-று. (202)
1250. சாகரஞ் சலசரங்கட் காகரங்க ளல்லவாம்
நாகமாதி பாதநால் போகபூமி தீவெலாம். (இ-ள்.) சுல்லைமேரு
- க்ஷுல்லக
சாகரம் - அஸங்கியாத
ஸமுத்திரங்களும், சலசரங்கட்கு - ஜலசர ஜீவன்களுக்கு,
ஆகரங்கள்
- இருப்பிடங்கள், அல்லவாம் - அல்லாதவனவாகும், தீவெலாம் -
அஸங்கியாதத்வீபமெல்லாம், நாகமாதி
- யானை முதலாகிய,
பாதநால் - சதுஷ்பாதங்களையுடைய ஜீவன்களிருக்கும்
படியான,
போகபூமி - திரியக்போக பூமிகளாகும், எ-று. (203) |