தீர் - குற்றம் நீங்கிய, பண்ணவர் படிமம்
- பகவானது ரூபமான
நிர்கந்ததபசை, கொண்டார் - கைக்கொண்டார்கள், எ-று.
(122) 123. மணிமுடி கலிங்க மாலை மணித்துண
ரனைய குஞ்சி
பணியொடு பரிந்து நின்றார் பருமத யானை யொத்தார்
குணமணி யணிந்து குன்றாப் பண்ணவர்
குழாத்தைப்புக்கா
ரிணையிலாச் சித்தி நன்னாட் டிளவர சியன்ற தொத்தார்.
(இ-ள்.) மணி
- இரத்தினத்தாலாகிய, முடி - முடியையும்,
கலிங்கம் - பட்டுவஸ்திரத்தையும், மாலை -
மாலைகளையும்,
மணித்துணரனைய - இந்திர நீலமணியின்
கிரணக்கொத்துக்களுக்குச்
சமானமாகிய, குஞ்சி - தலையின் மயிர்
முதலியவைகளையும்,
பணியொடு - ஸர்வக்ஞரால் சொல்லப்பட்ட தீக்ஷாவிதியின்
பிரகாரம்,
பரிந்து - நீக்கி, நின்றார் - தவநிலையில் நின்ற அவர்கள்,
பரு -
பருத்த, மதயானை யொத்தார்
- மதயானைக்குச்
சமானமானவர்களாயும், (என்றதனால், ‘மதயானையைப்
பாகர்கள்
வசமாக்கும்பொருட்டு அதன் அணி முதலானவைகளை
நீக்கி
ஆகாராதிகளையுங் கட்டுப்படுத்த அது அக்கட்டுக்கடங்கியது
போல
இவர்களும் இந்திரியங்களை வசமாக்கி அடக்கும்பொருட்டு
ஏற்பட்ட
சர்வக்ஞர் ஆக்கினையில் கட்டுப்பட்டு நின்றார்கள்,"
என்பது
பெறப்படும்). குணமணி - ஸம்மியக்ஞானாதி குண
ரத்தினங்களை,
அணிந்து - தரித்து, குன்றா - குறைவில்லாத,
பண்ணவர் -
முனிவர்களுடைய, குழாத்தை - கூட்டத்தை,
புக்கார் -
அடைந்தவர்களாயும், இணையிலா - உவமையில்லாத, சித்தி -
ஸித்தி
அல்லது மோக்ஷமென்னும், நல் -
நன்மையாகிய, நாட்டு -
க்ஷேத்திரத்தின், இளவரசு - யுவராஜபதவியில்,
இயன்றது -
பொருந்தியதை, ஒத்தார் - நிகர்த்தார்கள், எ-று.
(123)
124. ஆங்கவ ரங்க பூவ மாதிநூ லோதி யார்க்குந்
தாங்கருங் கொள்கை தாங்கித் தாமுடன் சென்று
பின்னா
ளோங்கிய வுலக மூன்று மொருவழிப் படுக்க
லுற்றுப்
பாங்கினால் வைச யந்தன் பருப்பத சிகரஞ்
சேர்ந்தான்.
(இ-ள்.) ஆங்கவர் - அவ்விடத்தில்
அம்முனிவர்கள் மூவரும்,
அங்க பூவமாதி - அங்காகமம் பூர்வாகமம்
முதலாகிய, நூல் -
பரமாகமங்களை, ஓதி - படித்து, யார்க்கும் -
எவர்களுக்கும்,
தாங்கரும்
- தாங்குவதற்கரிதாகிய, கொள்கை
- சாரித்திரங்களை,
தாங்கி - தரித்து, தாம் - தாங்கள்,உடன் -
அந்தக்கொள்கையுடனே,
சென்று - போய்,பின்னாள் - பிற்பட்ட நாளில், ஓங்கிய -
பெரிதாகிய,
உலக மூன்றும் - மூவுலகத்தையும்,
ஒருவழிப்படுக்கலுற்று -
ஒரேதன்மையாக வசப்படுத்த உத்தேசித்து,
பாங்கினால் -
கிரமத்தினால், வைசயந்தன் - (அவர்களில்)
வைஜயந்தமகாமுனி,
பருப்பதசிகரம் - (தனியாக) ஒருபர்வத சிகரத்தை,
சேர்ந்தான் -
அடைந்தான், எ-று.
(124)
|