125. மழைபனி வெயில்க டாங்கி மலைமிசை மலையைப் போல
வெழில்பெற நின்ற போழ்தி னெழுந்தசுக் கிலத்தி யானம்
பழவினை முழுதும் பாறப் பரந்தன வனந்த நான்மை
முழையிடைப் பழகிற் றேனும் விளக்கின்முன் னிருளுண் டாமோ.
(இ-ள்.) மழை - மழையும், பனி - பனியும், வெயில்கள் -
வெயிலுமாகிய இவைகளை, தாங்கி - சகித்து, மலைமிசை -
பர்வதத்தின்மேல், மலையைப்போல - மற்றொருபர்வதம்போல,
எழில்பெற - அழகுபெற, நின்ற போழ்தில் - யோகத்தில்நின்ற
காலத்தில், எழுந்த - உண்டாகிய, சுக்கிலத்தியானம் - பிரதம த்விதீய
சுக்கிலத்தியானங்களினால், பழவினை முழுதும் - பழமையாகிய
காதிகருமங்கள் முழுமையையும், பாற - கெட, அனந்த நான்மை -
அனந்த சதுஷ்டயங்கள், பரந்தன - ஆத்மனிடத்தில் விசாலித்தன,
முழையிடை - பர்வத குகையினிடத்தில், பழகிற்றேனும் - வெகுகாலம்
பழகியிருந்தாலும், விளக்கின்முன் - தீபத்தினது எதிரில், இருள் -
அந்தகாரமானது, உண்டாமோ - இருக்குமோ? (இராது என்றபடி),எ-று.
சுக்கிலத்தியானத்தின் விவரம் பதார்த்தசாரத்தில் முப்பதாவது
அதிகாரத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (125)
126. சித்தநல் லிரதஞ் சென்ற தாதுக்கள் போலத் தாது
வொத்தொரு வகைய தாகி யொளியுமிழ்ந் திலங்கு
மேனி
சித்திரத் தியற்றப் பட்ட படமெனத் தேவர் சென்றார்
முத்திபெற் றிருந்த கோவு மதன்முன்னர் விளக்கை யொத்தான்.
(இ-ள்.) நல் - நன்மையாகிய, சித்தஇரதம் - ஸித்தரஸமானது,
சென்ற - சென்றடைந்த, தாதுக்கள்போல - இரும்பு முதலிய
லோகங்களைப்போல (அதாவது :- இரசஞ்சேர்ந்த வுலோகங்கள்
ஸ்வர்ணமானது போல), தாது - தாது உபதாதுக்கள், ஒத்து -
பொருந்தி, ஒருவகையதாகி - ஒப்பற்ற விதமாகி, மேனி - (இந்த
வைஜயந்த பட்டாரகருடைய) சரீரமானது, ஒளியுமிழ்ந்து -
ஆத்மஜோதியை விரித்து, இலங்கும் - விளங்குந்தன்மைத்தாயிருந்தது;
(அப்போது) தேவர் - சதுர்ணிகாய தேவர்கள், சித்திரத்தியற்றப்பட்ட -
சித்திரக்காரனால் சித்திரத்திற் செய்யப்பட்ட, படமென -
சித்திரப்படம்போல, (ரூபங்களை வெசு அழகாக நிர்மாணம்
பண்ணிக்கொண்டு), சென்றார் - (இவரிடத்தில்) அடைந்தார்கள், முத்தி
பெற்றிருந்த - முத்தி மார்க்கத்தை யடைந்திருந்த, கோவும் -
வைசயந்தபட்டாரகரும், அதன்முன்னர் - அத்தேவர்களாகிய
படங்களின் கூட்டத்தின் முன்னர், விளக்கையொத்தான் - ஏற்றிவைத்த
தீபத்தைப்போல பிரகாசித்தார், எ-று. (126)
127. தேமலர் மாரி சுண்ணஞ் சிதறினர் திசைகண் முட்டத்
தூமமு மெழுந்த தீபஞ் சுடர்ந்தன மிடைந்த தேவர்
|