இங்கு வந்து - இந்தப் பூமியில் வந்து தீர்த்தங்கரர்களாகி, இமையவர்
- தேவர்கள் செயும் - செய்கின்ற, சிறப்பைந்தும் -
பஞ்சகல்யாண
பூஜைகளையும், எய்தி - அடைந்து, போய்
- ஸகல கர்மக்ஷயம்
செய்து போய், இமையவர் தொழ -
தேவர்கள் வணங்கும்படி,
சித்தியகத்தும் - மோட்சமென்கிற ஸித்தி க்ஷேத்திரத்தில், இருப்பர் -
ஸ்வயம்புவாக வீற்றிருப்பார்கள், எ-று. (260)
1308. எண்வகை வியந்தரர்க் கிடமி தாகவும்
பண்ணவர் பணித்தனர் பல்ல மாயுக
முன்னிலத் தெங்கணு முறைவ ரோக்கமும்
பண்ணுறு சிலைகள்பத் தாகு மென்பவே.
(இ-ள்.)
எண்வகை - எட்டுப்பிரகாரமாகிய,
வியந்தார்க்கு
- வியந்தர தேவர்களுக்கு, இடம் - ஸ்தானமானது, இதாகவும் -
இந்த
மத்தியமலோகமேயாகவும், பண்ணவர் - ஸர்வஜ்ஞர், பணித்தனர் -
சொன்னார், (மேலும் இவர்கள்),
பல்லமாயுகம் -
ஒரு
பல்லமாயுஷ்யத்தில், முன்னிலத்து -
முன்னாலே சொல்லப்பட்ட
அஸங்கியாதத்வீப சமுத்திரங்களில், எங்கணும்
- எவ்விடங்களிலும்,
உறைவர் - தங்கியிரா நின்றவர்களாவார்கள், (இவர்கட்கு), ஓக்கமும் -
உன்னதமும், பண்ணுறு - பண்ணிட்டிரானின்ற, சிலைகள் - விற்கள்,
பத்தாகும் - பத்தாம், என்ப - என்றும் சொல்லுவர், எ-று. (261)
1309. ஆயிரம் யோசனை யாழ்ந்த தோங்கிய
தாயிர மிலாதநூ றாயி ரம்புகை
யாயிரம் பத்தடி யகல மாயது
மேயநால் வனத்தது மேரு வென்பவே.
(இ-ள்.)
மேருவென்ப - மஹம்மேரு
பர்வதமென்று
சொல்லப்படுவது, ஆயிரம் யோசனை -
ஆயிரம் யோஜனைப்
பிரமாணம், ஆழ்ந்தது - பூமிக்குள் ஆழ்ந்ததாகும்,
ஆயிரமிலாத -
ஆயிரங்குறைந்த, நூறாயிரம்புகை - நூறாயிரம் யோஜனை, (அதாவது
: தொண்ணூற்றொன்பதினாயிரம் யோஜனை), ஓங்கியது -
பூமிக்குமேல்
உன்னதத்தையுடையதாகும், அடி - அடியில்,
ஆயிரம் பத்து -
பதினாயிரம் யோஜனை, அகலமாயது - அகலமுள்ளதாகும்,
மேய -
பொருந்திய, நால்வனத்தது - (பத்திராஸால, நந்தன,
ஸௌமனஸ,
பாண்டுகமென்னும்) நாலுவனங்களை யுடையதாகும், எ-று. (262)
1310. துகணில மீதுபத் திலாதவெண் ணூறுநற்
புகைமிசை நூற்றொரு பத்து வான்புகை
யிகழ்விலாச் சோதிட ரொருக
யிற்றெல்லை
யகணிலத் தியங்குவர் புறத்து நிற்பரே.
|