வைசயந்தன் முத்திச்சருக்கம் 61


Meru Mandirapuranam
 

   தாமமுஞ் சாந்து மேந்தித் தாம்பணிந் தெழுந்து நின்று
   காமனைக் கடந்த கோமான் கழலடி பரவ லுற்றார்.

   (இ-ள்.)  மிடைந்த -  அவரிடத்தில்  வந்து  சேர்ந்த,  தேவர் -
அத்தேவர்கள்,   தேம்   -   வாசனைபொருந்திய,   மலர்மாரி    -
புஷ்பவருஷத்தையும்,  சுண்ணம் - கந்தப் பொடியையும், சிதறினர்  -
சொரிந்தார்கள்,  திசைகள்  -  எத்திக்குகளிலும்,  முட்ட - (வாசனை)
வியாபிக்கும்படியாக,  தூமமும்  -  அகில்தூப   முதலானவைகளும்,
எழுந்த  -  உண்டாய்ப் பரவின, தீபம் - (இரத்ன) தீபமுதலாயினவும்,
சுடர்ந்தன  -  பிரகாசித்தன,  (பின்னும்) தாம் - அத்தேவர்கள் தாம்,
தாமமும் - மாலைகளையும், சாந்தும் - சந்தன முதலானவைகளையும்,
ஏந்தி - சர்வக்ஞனுக்கு அர்ச்சனையாகத் தரித்து, பணிந்து - வணங்கி,
எழுந்துநின்று -எதிரில் எழுந்துநின்று, காமனை - மன்மதனை, கடந்த
-  ஜெயித்த,  கோமான்  -  அந்த  இறைவரது,  கழலடி  -  முன்பு
வீரகண்டை  யணிந்திருந்த  பாதத்தை,  பரவலுற்றார்  -  ஸ்துதிக்கத்
தொடங்கினார்கள், எ-று.

      கழலடி - என்பது, பூர்வாபேக்ஷையைப்பற்றிச் சொல்லப்பட்டது,
பூர்வாபேக்ஷை முன் அரசனாயிருந்த நிலைமை. (127)

                        வேறு.
128. உவத்தல் காய்தலா லுன்றிரு வடித்தலத் தெழுந்தோர்க்
    குவத்தல் காய்தலுன் றிருவுளத் தொன்றுநீ யிலையேற்
    சுவர்க்க மாநர கத்தவர் துன்னுவ துனது
    தவத்தின் றன்மையோ தம்வினைத் தன்மையோ வருளே.

    (இ-ள்.)  உவத்தல்     -   சந்தோஷித்தலாலும்,   காய்தலால்,
கோபித்தலாலும்,  உன்  -  உன்னுடைய, திருவடித்தலத்து - அழகிய
பாததலத்து,  எழுந்தோர்க்கு  -   வந்தடைந்தவர்களுக்கு, நீ-, உன் -
உன்னுடைய,  திரு  -  அழகிய,  உளத்து  -  மனதில்,  உவத்தல் -
சந்தோஷிப்பதும், காய்தல் - கோபித்தலும்,ஒன்றிலை - பொருந்திலை,
இலையேல்   -   (  அங்ஙனம்   உன்னிடத்தில்   அக்குணங்கள்)
இல்லையானால்,   அவர்  -  அவ்விருதிறத்தவர்களில்,  சுவர்க்கம் -
(உன்மேல்     அனுராகித்தவர்,    அதாவது  :    சந்தோஷித்தவர்)
சுவர்க்கத்தையும்,  மாநரகத்து  - (உன்மேல் த்வேஷித்தவர், அதாவது
கோபித்தவர்)  பெரிய  துக்கத்தையுடைய  நரகத்தையும், துன்னுவது -
அடைவது,  உனது  - உன்னுடைய,தவத்தின்றன்மையோ - தபஸினது
குணமோ?  தம்வினைத்  தன்மையோ - அவர்களுடைய வினையினது
குணமோ? அருள் - எங்களுக்குத்   தெரியும்படி   கூறியருள்வாயாக,
எ-று. (128)

 129. இறந்த காதிக ணான்மையு மழிந்தவக் கணத்தே
     நிறைந்த நான்மையும் வானவர் நிலையுடன் றளராப்