610மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

ஜோதிஷ்கராகிய)   மூவகை   தேவர்களுக்கும்,      கீழவாயுகம் -
ஜகன்னியாயுஷ்யமானது,   ஈராயிரங்கள்   அஞ்சு   -   பதினாயிரம்
வருஷங்களாகும், எ-று. (265)

 1313. இரண்டு நான்குமுன் னான்குமே ழாறுமற்
      றிரண்டினோ டெழுபதா மிந்து வருக்கனுந்
      திரண்ட நூற்றுமுப் பத்திரண் டுஞ்செலு
      மிரண்டி ரண்டரைச் சாகரத் தீவினே.

    (இ-ள்.)       இரண்டிரண்டரைச்     சாகரத்      தீவின் -
மத்தியமலோக மத்திய  பூமியாகிய   இரண்டரைத்வீபம்    இரண்டு
ஸமுத்திரங்களிலும், இந்து - சந்திரனும்,   அருக்கனும் - ஸூர்யனும்,
இரண்டு - (ஜம்பூத்வீபத்தில்) இரண்டு சந்திரர் இரண்டு ஸூர்யர்களும்,
நான்கு - (மஹா லவண   ஸமுத்திரத்தில்)  நான்கு  சந்திரர்  நான்கு
ஸூர்யர்களும், முன்னான்கு -  (தாதகீஷண்டத்வீபத்தில்)  பனிரண்டு
சந்திரர்   பனிரண்டு    ஸூர்யர்களும்,    ஏழாறு  -   (காளோதக
ஸமுத்திரத்தில்)          நாற்பத்திரண்டு          ஸூர்யர்களும்,
இரண்டினோடெழுபதாம் -(புஷ்க்கரார்த்தத்வீபத்தில்)  எழுபத்திரண்டு
சந்திரர்  எழுபத்திரண்டு     ஸூர்யர்களும்,  (ஆசி)     திரண்ட -
சேர்க்கப்பட்ட,    நூற்றுமுப்பத்திரண்டும்   -     இந்த     நூற்று
முப்பத்திரண்டு      ஸூர்ய       சந்திரர்களும்,        செலும் -
கமனத்தையுடையவர்களா யிராநின்றார்கள், எ - று (266)

வேறு.

 1314. துறக்கத்தி னியற்கை சொல்லிற் சொல்லிய படலந் தோறு
      மிறப்பவிந் திரகஞ் சேணி பந்தங்கிண் ணகமு மாகுந்
     திறத்துளி சேணி பந்த மிருதுநாற் றிசையுஞ் சென்ற
     வறக்கதி ராழி வேந்த னறுபதோ டிரண்டென் றானே.

     (இ-ள்.)    துறக்கத்தின்     -  ஸ்வர்க்க  லோகத்தினுடைய,
இயற்கை - ஸ்வரூபத்தை, சொல்லில் -  சொல்லுமிடத்தில், சொல்லிய
- சொல்லப்பட்டிருக்கிற,    படலந்தோறும் -  படலங்கள் படலங்கள்
தோறும், இறப்ப - மிகவும்,  இந்திரகம் -  இந்திரகங்களும்,   சேணி
பந்தம்  -   ஸ்ரீணிபந்தங்களும்,    கிண்ணகமும்   -     புஷ்ப்ப
பிரகீர்ணங்களும்,  (என)   ஆகும்  -  (இப்படி  மூன்று   விதமான
விமானங்கள்) ஆகும்,  திறத்துளி  -  வரிசையை உள்ளிட்டிராநின்ற,
சேணி பந்தம்  -  ஸ்ரீணிபந்தங்களானவை,  இருது  -  (ஸௌதர்ம
கல்ப்பத்தில்)  இருது  விமானத்தினுடைய,  நாற்றிசையும்  -    நாலு
திக்குகளிலேயும்  சென்ற  -  வரிசையாக இராநின்ற சங்கியையானது,
அறக்கதிராழி   வேந்தன்  -  தர்ம  சக்கரத்தையுடைய   அரஹந்த
பரமதேவன், அறுபதோடிரண்டு - அறுபத்திரண்டு பேஸ்ரீணிபந்தமாகும், என்றான் - என்று சொன்னான், (அதாவது தெரிவித்தான்), எ-று. (267)