1317. நூற்றினோ டொருபத் தொன்றா மேட்டிம திரயத் தின்க
ணூற்றினோ டேழு மாகு மத்திம மும்மை யிற்றொண்
ணூற்றினோ டொன்று மாகு முபரிம மும்மை யின்கண்
ணாற்றவு மொன்ப தைந்தா மணுதிசா ணுத்த ரத்தே.
(இ-ள்.) ஏட்டிமதிரயத்தின்கண்
- ஹேஷ்டிமத்திரயத்தில்,
நூற்றினோடொருபத் தொன்றாம் - நூற்றுப்பதினோரு விமானமாகும்,
மத்திம மும்மையில் - மத்திமத்திரயத்தில்,
நூற்றினோடேழும் -
நூற்றியேழு விமானங்களும், ஆகும் - ஆம், உபரிம மும்மையின்கண்
- உபரிமத்திரயத்தில், தொண்ணூற்றினோடொன்றும்
-
தொண்ணூற்றொரு விமானங்களும், ஆகும் - ஆம், ஆற்றவும்
-
மிகவும் மேலான தன்மையுள்ள, அணுதிசா - நவாணுதிசையில், ஒன்பது
விமானங்களும், அணுத்தரத்து -
பஞ்சாணுத்தரத்தில், ஐந்து -
ஐந்தேவிமானங்களும், ஆம் - ஆகும், எ-று. (270)
1318. இந்திரர் சாமா னீகர் தாயத்திங் கர்பா ரிடதர்
கந்தபா லர்காப்ப ரா னீகர்கீ ணர்கில்
விழியர்
விந்திரா திகளிற் பத்து மரசர்கள் குரவ
ரன்றி
மந்திரர் சூழ்ந்தி ருப்பர் காஞ்சுகி யாதி
போல்வார்.
(இ-ள்.) இந்திரர்
- இந்திரர்களும், சாமானீகர் - ஸாமானீக
தேவர்களும், தாயத்திங்கர் - த்ராயத்ரிம்ச தேவர்களும், பாரிடதர்
-
பிரதீந்திரர்களும், கந்தபாலர் - லோகபால தேவர்களும், காப்பர்
-
தண்டநாயகர்களும், ஆனீகர் - ஆனிக
தேவர்களும், கீணர் -
ப்ரகீர்ணக தேவர்களும், கில்விழியர் - கில்விழிகர்களும்,
(ஆகிய)
இந்திராதிகளில் - இந்திரர் முதலானவர்களில்,
பத்தும் - இந்தப்
பத்துத் தரங்களும், அரசர்கள் - பூமியிலிராநின்ற ராஜாக்களும், குரவர்
- பெரியோர்களும், அன்றி - அல்லாமலும்,
மந்திரர் - மந்திரி
முதலானவர்களும், சூழ்ந்திருப்பார் - கூடியிருப்பார்கள், (இவர்கள்)
காஞ்சுகியாதிபோல்வார் - மேற்சட்டை முதலியவை போல்வார்கள்,
எ-று.
(271)
1319. நடுவணென் புகைக்கொ ழுப்பாய் நந்தியீச் சிறகொத் தீற்றிற்
குடைமலர்ந் திருந்த தேபோன் றிரண்டரைத் தீவோ டொத்துக்
கடையிலா வறிவு காட்சி யுடையவர் கழுமி நின்ற
விடமது வுலகத் துச்சி யேத்தருந் திறத்த தாமே.
(இ-ள்.) கடையிலா
- அனந்தமாகிய, அறிவு - ஞானத்தையும்,
காட்சி - தர்சனத்தையும், உடையவர் - உடைத்தானவர்களாகிய
சித்தபரமேஷ்டிகள், கழுமி நின்ற - பொருந்தி யிராநின்ற, இடமது -
ஸித்திக்ஷேத்திரமென்னும் இடமானது, |