சமவசரணச்சருக்கம்613


 

உலகத்துச்சி - லோகத்தினுடைய சிகரமாகி, (அஷ்டமப்பிரத்வீ என்னும்
பெயருடைய   சித்தசிலை   யமையப்பெற்று),   நடுவண் - மத்தியில்,
எண்புகைக்கொழுப்பாய்  - எட்டுயோஜனை பிரமாண பாகுல்லியத்தை
யுடையதாகி, நந்தி  - நிறைந்து, ஈற்றில் - கடையில்,  ஈச்சிறகொத்து -
ஈசலிற்குப்    பிரமாணமாகி,    குடைமலர்ந்திருந்ததே    போன்று -
குடையானது விரிந்திருந்ததற் கொப்பாகி, இரண்டரைத்தீவோடொத்து -
இரண்டரை த்வீபத்தினுடைய   விஸ்தீர்ணமாகிய  நாற்பத்தைந்து லட்ச
யோஜனை   விஸ்தீர்ணமாகி,   (அதன்மேல்     ஸித்தபரமேஷ்டிகள்
பொருந்தியிருப்பதால்) ஏத்தரும் - பவ்விய ஜீவர்களால் ஸ்துத்தற்கரிய,
திறத்ததாம் - விதாயத்தையுடையதாகும், எ-று.

     168 - வது, "முடிவிடைய   கலமாயதமொன்றேழ் முழ" என்னும்
பாடல்   முதல் 273-வது     பாடலாகிய இதுவரையிலும் லோகத்தின்
ஸ்வரூபம் ஸம்க்ஷேபமாகச்   சொல்லப்பட்டது. இதன்  ஸ்வரூபங்களை
திரிளோகஸாரம், காதலலோகாணி,  முதலிய கிரந்தங்களில் விசாலமாக
அறிந்துகொள்ளலாம்.                                    (272)

 1320. மதிசுத மவதி மாண்ட மனப்பச்சங் கேவ லமாம்
      விதியவாம் பமாணம் வேண்டின் விகற்பங்க ளியாவு மாகும்
      மதிசுதம் பரோக்க மாகும் மற்றபச் சக்க மாகும்
      விதியிவை விகலந் தூலஞ் சகலநிச் சயமு மாமே.

     (இ-ள்.) (ஸம்மியக்ஞானங்கள்), மதி - மதிஜ்ஜானமென்றும், சுதம்
- ஸ்ரீதஜ்ஞானமென்றும்,   அவதி - அவதிஜ்ஞானமென்றும், மாண்ட -
மாட்சிமை பொருந்திய,    மனப்பச்சம் - மனப்பரியயஜ்ஞானமென்றும்,
கேவலம் - கேவலஜ்ஞானமென்றும்,    ஆம் - இந்த ஐந்துமூலமாகிய,
விதியவாம் - விதிப் பிரிவுகளையுடையவாகும், பமாணம் - இவைகளின்
அளவுகளை,   வேண்டின்   - தனித்தனியாகச் சொல்லவேண்டினால்,
விகற்பங்கள்யாவும் - பலபல விகல்பங்களும், ஆகும் - ஆகும், மதி -
மதிஜ்ஞானமும்,    சுதம்   -    சுருதஞானமும்,   பரோக்கமாகும் -
பரோக்ஷஞானங்களாகும்,    மற்ற   -  அவதி மனப்பரியய கேவலஞ்
ஞானங்களாகிய   மற்றவைகள்,     பச்சக்கமாகும்   -   பிரத்தியக்ஷ
ஞானங்களாகும்,    விதியிவை    -    விதித்த    இவை, விகலம் -
(அவதிஜ்ஞானம்) விகலப் பிரத்தியக்ஷமாகவும், தூலம் - (மனப்பரியயம்)
ஸ்தூல     பிரத்தியக்ஷமாகவும்,   சகல நிச்சயமும் - (கேவலஞானம்)
ஸ்தூலமும் ஸுக்ஷ்மமுமாகியுள்ள ஸகல பதார்த்தங்களையும் அறிகின்ற
நிச்சயப் பிரத்தியக்ஷமாகவும், ஆம் - ஆகும், எ-று.            (273)

 1321. மதியினுங் கருத்து கண்கூ டிரண்டுமாம் விசேடம் பத்தாம்
      விதியது கண்கூ டாகும் விசாரணை நீக்கந் தேற்றம்
      மதிசுருதி சன்னா சிந்தை மற்றிவை பரோக்க மாகுஞ்
      சுதமதன் முன்பு செல்லு மதியுநற் பரோக்க மாமே.