1327. தன்னைக்கொன் றுயிரை யோம்பல் தக்கநற்
கருணை யென்றும்
பின்னைத்தா னூனை யுண்கை பெருந்தவ மாவ தென்று
முன்னிற்றான் கணத்தி யாவு மொட்டறக் கெடுமென் றோதிப்
பின்னைத்தா னித்த முத்திக் குழக்கெனப்
பேசலாமே.
(இ-ள்.) தன்னைக்கொன்று
- தன்னை ஹிம்ஸித்து,
உயிரையோம்பல் - பிற ஜீவன்களை
ரக்ஷிக்கின்றது, தக்க -
தகுதியாகிய, நல் - நன்மையாகிய,
கருணையென்றும் -
தயவாகுமென்றும், பின்னை - பிறகு, தான் - தானே, ஊனை யுண்கை
- மாமிசம் பொசித்தலே, பெரும் -
பெரிதாகிய, தவமாவது -
தபஸாகப்பட்டது, என்றும் - என்றும், உன்னில் - யோசிக்குமிடத்தில்,
தான் ஆத்மனானது, கணத்து - ஸமயத்தில், யாவும் - முழுதிலும்,
ஒட்டற - பற்றற, கெடுமென்று - ஸர்வதா நாசமாகுமென்றும், ஓதி -
சொல்லி, பின்னை - பிறகு, தான்
- ஆத்மன் தான், நித்தம் -
நித்தியமாகிய, முத்திக்கு -
மோட்சத்திற்கு, உழக்கென -
உத்ஸாஹித்துச்செல்லுமென்றும், பேசல் பேசுவதும்,
ஆம்
ஆகுமென்றும், எ-று.
இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்.
(280)
1328. அறிவினே வீடா மன்றி யாசாரத் தாகு மன்றி
யிறைவனற் காத லாலா மிவ்விரண் டாலு மாகு
நெறிமுத்திக் கில்லை நித்தம் முத்தனே
சீவ னென்றும்
அறிவின்மை நன்றே யென்று மழைத்தலாம் பிழைத்த நீதி.
(இ-ள்.) அறிவினே - ஞானத்தாலேயே,
வீடாம் - மோக்ஷமாகும்,
அன்றி - அது வல்லாமல், ஆசாரத்து - ஆசாரத்தினாலே, ஆகும் -
மோட்சமாகும், அன்றி - அது வல்லாமல், இறைவன் - ஸ்வாமியின்
மேலுண்டாகிய, நல் - நன்மையாகிய, காதலால் - பக்தியினாலேயே,
ஆம் - ஆகும், இவ்விரண்டாலும் - இந்த ஆசாரம் பக்திகளாகிய
இரண்டினாலேயே, ஆகும் - ஆகும், முத்திக்கு - மோட்சத்திற்கு,
நெறி - வழி, இல்லை வேறொன்றில்லை, சீவன் - ஜீவன், நித்தம்
-
நித்தியமும், முத்தனே - முக்த ஸ்வரூபனே, என்றும்
- என்றும்,
அறிவின்மை - அஜ்ஞானமே, நன்று - நல்லது, என்றும் - என்றும்,
அழைத்தல் - சொல்லுகின்றது முதலானவைகள், பிழைத்த நீதி ஆம் -
மித்தியா நீதி ஆகும், எ-று. (281)
1329. இறைவமற்றென்கொ லேது வினைமன்னர் மிகுதற் கென்றங்
கறைகழ லரசர் கேட்டா ரருந்தவ ருரைக்க லுற்று
நெறியினா லெட்டுந் தத்த நிமித்தத்தை
நிறையப் பெற்றுச்
செறியமிக் கல்ல தீன மாமது செப்பக் கேண்மின்.
|