வேறு.
1349. ஆயுவுங் கரணமும் பொறியு மக்கதி
வாயுவுங் கெடுதலால் மரண மற்றவை
போயுழிப் பெறுதலாம் பிறவி போமிடத்
தேயுமொன் றிரண்டுமூன் றாங்க ணங்களே.
(இ-ள்.) அக்கதி
- அந்தந்தக் கதிகளுக்கு ஸ்திதியாகிய,
ஆயுவும் - ஆயுஷ்யமும், கரணமும் - காய வாக் மனமும், பொறியும்
- இந்திரியமும், வாயுவும் - உச்வாஸ நிச்வாஸமுமாகிய பிராணன்கள்,
கெடுதலால் - நாசமாவதனால், மரணம் - மரணமென்பதாகும், மற்று -
பின்பு, அவை - அவைகள், போயுழி - கார்மண காயத்தோடு கூடிச்
சென்றவிடத்து, பெறுதல் - மறுபடியும் அப்பிராணன்களைப் பெறுவது,
பிறவி - ஜனனமென்பதாக, ஆம் - ஆகும், போமிடத்து - அப்படி
மரணமாகிப் போகுமிடத்தில், (ஜனனமென்னும் பிராணன்களை
மறுபடியடைவதற்கு), ஒன்று இரண்டு மூன்று - ஒன்றும் இரண்டும்
மூன்றும், ஆம் - ஆகிய, கணங்கள்
- ஸமயங்கள், ஏயும் -
இசைவனவாகும், எ-று.
ஜீவன்கள் கதியாந்தரங்களுக்குச்
செல்லும்போது ஏற்படும் ஒரு
ஸமயம் இரண்டு ஸமயம் மூன்று ஸமயமாகிய
காலங்களையும்
அக்கதியின் விவரங்களையும், ஸுகபோதை யென்னும் தத்துவார்த்த
ஸூத்ர வியாக்கியானமாகிய கிரந்தத்தில் 2-வது
அதிகாரத்தில்
பார்த்துக்கொள்ளவும். பதார்த்த ஸாரத்தில்
முப்பதாவது
அதிகாரத்திலும் விரிவாகக் காணலாம். (302)
1350. உரைத்தவிப் பிறப்புப பாத மூர்ச்சனை
கருப்பமு மாமும்மைத் தேவர் நாரகர்க்
குரைத்த வற்றுப பாதஞ் சராயுகங்
கருப்பமா னவர்களுக் காவ தாகுமே.
(இ-ள்.) உரைத்த
- சொல்லப்பட்ட, இப்பிறப்பு - இந்த
ஜனனமானது, உபபாதம் - உபபாதமென்றும்,
மூர்ச்சனை -
ஸம்மூர்ச்சனையென்றும், கருப்பமும் - கர்ப்பமென்றும், மும்மையாம் -
மூன்றுபிரகாரமாகும், உரைத்தவற்று - சொல்லப்பட்ட இவைகளில்,
தேவர் - தேவர்களுக்கும், நாரகர்க்கு - நரகர்களுக்கும், உபபாதம் -
உப்பாதப் பிறப்பாகும், மானவர்களுக்கு - மனிதர்களுக்கு, சராயுகங்
கருப்பம் - ஜராயு படலத்தோடு கூடிய கர்ப்பமானது, ஆவதாகும் -
ஆகப்பட்டதாகும், எ-று. (303)
1351. நம்மினுண் ணியவர்நா லறிவு காறுளார்
சம்முச்சப் பிறவியர் விலங்கி லைம்பொறி
|