சமவசரணச்சருக்கம்629


 

    விம்மினார் சம்முச்சங் கருப்பத் தாவதாந்
    தம்மிலுஞ் சராயுக மண்டம் போதமாம்.

     (இ-ள்.)    நம்மினுண்ணியவர்   -  நமக்குள்  நுண்ணியராகிய
பஞ்சேந்திரிய   லப்திய பரியாப்தக மனுஷ்யரும், நாலறிவு காறுளார் -
ஏகேந்திரிய   த்வீந்திரிய    த்ரீந்திரிய   சதுரிந்திரிய ஜீவன்கள்வரை
உள்ளவரும்,  சம்முச்சப்பிறவியர் - ஸம்மூர்ச்சனாப் பிறப்புடையராவர்,
விலங்கில்   - திரியக்     ஜீவன்களில்,   ஐம்பொறி   விம்மினார் -
பஞ்சேந்திரியங்களில்  பிறப்பவர்கள், சம்முச்சம் - சில சம்மூர்ச்சனாப்
பிறப்பிலும்,    கருப்பத்து - சில     கர்ப்பங்களிலும்,   ஆவதாம் -
ஆக்கப்பட்டதாகும்,    தம்மிலும் - அந்ததிரியக்கதி  கர்ப்பங்களிலும்,
சராயுகம் - ஜராயுபடலத்தோடு    கூடிப்      பிறப்பதும், அண்டம் -
முட்டைகளில் பிறப்பதும், போதம் - குட்டிகளாகப் பிறப்பதும், ஆம் -
ஆகும், எ-று.

     இவைகளின்   விஸ்தாரங்களை   ஸுகபோதை என்னும் நூலில்
இரண்டாவது அத்தியாயத்தில் பார்த்துக்கொள்ளவும்.          (304)

1352. யாவையுந் தோற்செவி யுடைய சன்னியாந்
     தாவருந் துளைச்செவி சன்னிய சன்னியாம்
     மேவருந் திருவறம் மேவுஞ் சன்னிக
     ளோவிலாப் பிறப்பிவற் றியோனி யொன்பதாம்.

     (இ-ள்.)    ஓவிலா    -    இடைவிடாமல்  பிறக்கும்படியான,
பிறப்பிவற்றின்   - இந்தப்     பிறப்புகளின்,    யோனி - ஜீவன்கள்
பிறக்கும்படியான     யோனிஸ்தானங்கள்,      ஒன்பதாம் - ஒன்பது
பிரகாரமாகும்,    யாவையும் - இந்த    ஜீவன்களில்     யாவையும்,
தோற்செவியுடைய    -    தோல்காதுடையவைகள்,    சன்னியாம் -
ஸஜ்ஞிஜீவன்கள்   ஆகும்,    தாவரும் - நீக்குவதற்கு    அரிதாகிய,
துளைச்செவி   - துளைக்காதுடைய ஜீவன்கள், சன்னிய சன்னியாம் -
சில    ஸஜ்ஞிகளும்     சில    அஸஜ்ஞிகளிலுமாகும், சன்னிகள் -
ஸஜ்ஞிஜீவன்கள்,    மேவரும்  - பெறுதற்கரிதாகிய,     திருவறம் -
ஸ்ரீஜினதர்மத்தை,  மேவும் - பொருந்தும், (சில பொருந்தாமையுமாகும்),
எ-று.

     யோனிபேதங்களின்  விவரங்களை ஸுகபோதையில் இரண்டாவ
ததிகாரத்தில் பார்த்துக்கொள்ளவும்.                         (305)

1353. வினையுயிர் தத்தமில் விடுதல் வீடது
      தனகுண நீங்கலுந் தவியஞ் சூனியம்
      முனையவ ருடனுறல் முதல்வ னன்றுதா
      னனகனாய்க் குணங்களு மனந்த மாகுமே.