630மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)   வினை -   (அசேதனமாகிய புத்கலாத்மகங்களாகிய)
கர்மங்களும்,  உயிர் - (சேதனாத்மகங்களாகிய) ஜீவன்களும், தத்தமில்
- தங்கள்   தங்களிடமாக,  விடுதல் - (சுத்த சேதனாபரிணாமத்தினால்
ஆத்மா   ஸ்வரூபோபலம்பனமாகி     கர்மங்களை பந்தத்தினின்றும்)
நீக்குதல்,    வீடது - மோட்சமாகும்,   தனகுண நீங்கலும் - ஆத்மா
கர்மபந்தத்துக்குக் காரணமான அசுத்தசேதனா பரிணாமமாகிய ராகாதி
விபாவ குணங்களில் நீங்குதலும், தவியம் - அசேதனா இதரத் திரவிய
குணக்ஙள்    பற்றாமல்,    சூன்யம் - பரத்திரவியாதி    சூன்யமாகி,
முனையவருடன்   - லோகாக்கிரஸ்தாயிகளானவர்களுடன்      ஒரு
தன்மையாக,    உறல் - ஸித்தத்துவமடைதல், முதல்வன் - முதல்வன்
தன்மையான    தனது     ஸ்வபாவகுண ஸ்வயம்புவாகும், அன்று -
அப்பொழுது,    தான் - தானென்னும் தன்னிலையானது (அதாவது :
சுத்த ஆத்மாவானது),  அனகனாய் - பாபரஹிதனாகி, குணங்களும் -
தனது    ஸித்த சுத்த குணங்களும், அனந்தமாகும் - முடிவில்லாமல்
ஸ்தாயிகளாகும், எ-று.                                  (306)

1354. ஐம்பத்தைங் கணதரர்க் காதி யாங்கணத்
     தைம்பத் தைந்திரட் டிபத்தாம் புவ்வத
     ரைம்பதி னிரட்டிநாற் பத்தெட் டோதிய
     ரைம்பதி னிரட்டியொன் பான்வி குவ்வணர்.

     (இ-ள்.)    கணத்து   -  அந்த    விமல  தீர்த்தங்கரருடைய
கணங்களில்,   ஆதியாம்  - முதன்மையாகிய, ஐம்பத்தைங்கணதரர் -
கணதரர்   ஐம்பத்தைந்து    பெயர்களாகும், புவ்வதர் - பூர்வதரர்கள்,
ஐம்பத்தைந்திரட்டி    பத்தாம்  - ஆயிரத்து நூற்றுவராவர், ஓதியர் -
அவதிஜ்ஞானிகள்,        ஐம்பதினிரட்டி          நாற்பத்தெட்டு -
நாலாயிரத்தெண்ணூற்றுவர்,    விகுவ்வணர்    -     விக்கிரியாரித்தி
பிராப்தர்கள்,    ஐம்பதினிரட்டி யொன்பான் - தொளாயிரவர்களாவர்,
எ-று.                                                 (307)

1355. விலக்கில சையத ரறுபத்தெண் ணாயிரம்
     இலக்கமூன் றெட்டெட்டா யிரங்கள் சாதவ
     ரிலக்கமொன் றாயிர மூன்று காந்திய
     ரிலக்கநான் கிரண்டுசா வகிய சாவகர்.

     (இ-ள்.)    விலக்கிலசையதர்   -     ஸம்பூர்ணஸம்யதர்கள்,
அறுபத்தெண்ணாயிரம் - அறுபத்தெண்ணாயிரம் பேர்களாவர், சாதவர்
- நவஸம்யதர்கள்,   இலக்க    மூன்றெட்டெட்டாயிரங்கள் - மூன்று
லட்சத்து    அறுபத்துநாலாயிரவர்,   காந்தியர் - ஆரியாங்கனைகள்,
இலக்கமொன்றாயிர   மூன்று - இலக்ஷத்து மூவாயிரம் பெயர்களாவர்,
சாவகியர் - ஸ்ரீாவகிகள், இலக்க நான்கு - நாலுலட்சமாவர், சாவகர் -
ஸ்ரீரவகர்கள், இரண்டு - இரண்டு லக்ஷம் பெயர்களாவர், எ-று.  (308)