சமவசரணச்சருக்கம்631


 

1356. இனையவாம் விமலனார் கணத்து நாதராய்
     வினையெலா மறவெறி வேத நான்கினை
     மனைதுற வாணருக் கோதி மற்றவர்
     வினைகண்மே னினைவுறீஇ விவித்த மேவினார்.

     (இ-ள்.)    மற்றவர்    -   அந்த மேருமந்தரர் இருவர்களும்,
இனையவாம்   -    இத்தன்மையாகிய,     விமலனார்     - விமல
தீர்த்தங்கரருடைய,     கணத்து - த்வாதசகணங்களுக்கு,  நாதராய் -
முக்கியமானவர்களாகி, வினையெலாம் - கர்மங்களை  யெல்லாம், அற
- நீங்க,     எறி - கெடுக்கும்படியான,         வேத நான்கினை -
சதுரனுயோகமாகிய            ஸ்ரீுதத்தினை, மனைதுறவாணருக்கு -
ஸ்ரீவகர்களுக்கும் யதிகளுக்கும், ஓதி - உபதேசித்து, வினைகண்மேல் -
தங்களுடைய     கர்மங்களின்     மேல்,    நினைவுறீஇ - கெடுக்க
வேண்டுமென்கிற     தியானத்தைப்     பொருந்தி,     விவித்தம் -
கணங்களினின்றும் வேறாகிப் பிரிந்து, மேவினார் - தனியான இடத்தை
யடைந்தார்கள், எ-று.                                    (309)

1357. இனத்திடைப் பிரிந்துபோ மேறி ரண்டுபோற்
     கணத்திடைப் பிரிந்துபோய்க் கான மேவிய
     வனத்திடைப் பெருவரை யுச்சி மன்னினார்
     நினைப்பினைத் தன்கணே நிறுத்தி நின்றரோ.

     (இ-ள்.)   இனத்திடை   - கூட்டத்தினின்றும், பிரிந்துபோம் -
பிரிந்து   செல்லுகின்ற, ஏறிரண்டு போல் - இரண்டு விருஷபங்களைப்
போல,     கணத்திடை - கணங்களினின்றும், பிரிந்துபோய் - நீங்கிச்
சென்று,  கானமேவிய - ஆரண்யத்தைச் சேர்ந்த, வனத்திடை - ஒரு
வனத்தில்,     நினைப்பினை - தியானத்தை,     தன்கணே - தனது
ஆத்மனிடத்தில்,      நிறுத்தி நின்று - ஸ்தாபித்து நின்று, பெரும் -
பெரிதாகிய,    வரையுச்சி - ஒரு    பர்வத சிகரத்தை, மன்னினார் -
அடைந்தார்கள், எ-று.                                   (310)

1358. வரைப்பினுங் குளிர்ப்பைசெய் மரத்தி னீழலு
     மரைப்பினுஞ் சீதமாஞ் சந்தம் போலவும்
     நிரைத்துநின் றினாதசெய் தவர்க்கு மின்பமா
     முரைக்கணின் றுத்தமப் பொறையோ டோம்பினார்.

     (இ-ள்.)வரைப்பினும் - தன்னை அறுத்தாலும், குளிர்ப்பைசெய் -
அறுப்பவனுக்கும்  நிழலைத் தருகின்ற, மரத்தின் - மரத்தினது, நீழலும்
- நிழலையும்,   அரைப்பினும் - அரைத்த      காலத்தும், சீதமாம் -
குளிர்ச்சியாகிய, சந்தம்போலவும் - சந்தனக் கட்டையையும் போலவும்,
நிரைத்துநின்று  - வரிசையாகச் சேர்ந்துநின்று, இனாத - துன்பங்களை,
செய்தவர்க்கும் - செய்தவர்களுக்கும், இன்பமாம் - அவர்