சமவசரணச்சருக்கம்633


 

    செறிதவம் பன்னிரண் டிற்செ லாப்பினைத்
    துறவுமெய்த் தியாகமுந் துன்னி னார்களே.

     (இ-ள்.)  அறுவகைப்பொறி   -  ஸ்பரிச  ரஸ  கிராண சக்ஷு
பேஸ்ரீத்திரம் மனமென்னும் ஷட் இந்திரியங்களினுடைய,வழி - விஷய
வழிகளில்,    படர்ச்சி - செல்கின்ற     பரிணாமங்களை,   நீங்கியும்
செல்லாமற் றடுத்துப் போற்றுதலாகிய விஷய ஸம்யமமும், அறுவகைக்
காயத்தை - பிருத்திவி     அப்பு     தேயு        வாயு வனஸ்பதி
திரஸகாயமென்னும்  ஷட்ஜீவனி காயங்களை, அருளின்  - தயவோடு,
ஓம்பியும் - உபசரித்தும் (அதாவது :    பிராணி ஸம்யமமும், உத்தம
ஸம்யமமும்),    செறி - சேர்ந்திரா    நின்ற,  தவம்பன்னிரண்டில் -
த்வாதசவிததபங்களில்,  செலா - நிரதிசாரமாகச்  சேர்ந்து (அதாவது :
உத்தம தபஸும்), பினை - பிறகு, துறவு - யாதொரு பரிக்கிரகங்களின்
மேல்  பற்றின்றித் துறக்கின்ற உத்தம ஆகிஞ்ஜின்னியமென்னும் தர்ம
பரிணாமமும்,  மெய்தியாகமும் - ஆஸன்ன  பவ்விய ஜீவன்களுக்குத்
தத்துவோபதேசம்   பண்ணுதலாகி   பரமாகமங்களை வியாக்கியானம்
பண்ணியருளும்    சாஸ்திரதான    சக்தியாகிய உத்தமத் தியாகமும்,
துன்னினார் - பொருந்தினார்கள், எ-று.                    (314)

வேறு.

1362. மாதரைப் புகழ்தல் பார்த்தல் மற்றவ ரட்ட தென்றா
     லாதரித் துண்டல் புக்க வவ்வகத் துறைத லஞ்சொல்
     மேதகக் கேட்டல் மேவிச் சிரித்திடல் விழைவு நோக்கல்
     ஏதமின் றிவற்றி னீங்கி யிலங்குமுள் ளத்த ரானார்.

     (இ-ள்.) மாதரை - ஸ்த்ரீ ஜனங்களை, புகழ்தல் - ஸ்துதித்தலும்,
பார்த்தல் - விரும்பி    நோக்குதலும்,      மற்றவர் -  பின்பு அந்த
ஸ்திரீமார்களால்,    அட்ட   தென்றால் - சமையல் செய்ததென்றால்,
(அதனை),     ஆதரித்துண்டல் - ப்ரீதியோடு     கூடிப் புசித்தலும்,
புக்கவவ்வகத்துறைதல்  - (அவர்கள்) அடைந்திருக்கின்ற அவ்வீட்டில்
வாஸம்     செய்வதும்,     அஞ்சொல் - அவர்களுடைய   அழகிய
மொழிகளை,    மேதக - மேன்மையாக,   கேட்டல் - கேட்கின்றதும்,
மேவி - அவர்களுடன்     பொருந்தி,     சிரித்திடல் - ஹாஸ்யமாக
நகைப்பதும்,  விழைவு    நோக்கல் - அவர்களுடைய விருப்பத்தைப்
பார்த்தலும், (ஆகிய),    இவற்றின் - இந்தப்  பரிணாமங்களினின்றும்,
நீங்கி - பரிஹாரமாகி,    ஏதமின்று - குற்றமின்றாக,     இலங்கும் -
விளங்குகின்ற,    உள்ளத்தரானார் - (உத்தம   பிரம்மசரியமென்னும்)
தர்மகுணா ஸ்ரீ தமானார்கள், எ-று.                         (315)

1363. முன்னுகத் தளவு நோக்கி முன்புபின் பிரியச் செல்லா
     ரின்சொலும் பிறர்த மக்கு மிதத்தன வன்றிச் சொல்லா