ரன்புநீத் துயிரை யோம்பி யளவமைந் துண்ப ரார்க்கு
துன்புறக் கோடல் வைத்தல் மலங்களைத் துறத்தல் செய்யார்.
(இ-ள்.) (பின்னரும்), முன் - எதிரிலே, நுகத்தளவு -
ஒருவில்லுப்பிரமாணம், நோக்கி - நன்றாகப் பார்த்து, முன்பு பின்பு -
முன்னும் பின்னும், இரிய - ஜீவன்கள் பாதை யடைந்து
நீங்கும்படியாக, செல்லார் - செல்லாதவர்களாயும், (அதாவது :
ஈரியாஸமிதியுடையவர்களாயும்), இன்சொலும் - இனிய வசனத்தையும்,
பிறர் தமக்கு - அன்னியர்களுக்கு, மிதத்தனவன்றி -
மிதமானவையில்லாமல்,சொல்லார் - சொல்லாதவர்களாயும், (அதாவது :
பாஷாஸமிதியுடையவர்களாயும்), அன்பு நீத்து - ராகத்வேஷமின்றி,
உயிரை யோம்பி - ஸகல ஜீவன்களையும் உபசரித்து, அளவமைந்து -
அளவிற் பொருந்தி (அதாவது : மட்டுப்பண்ணி), உண்பர் -
பவித்திராஹாரத்தை பொஜிப்பவர்களாயும் (அதாவது : ஏஷணாஸமிதி
யுடையவர்களாயும்), ஆர்க்கும் - எவ்விதமானவர்களுக்கும், துன்புற -
துக்கமடையும்படியாக, வைத்தல் - ஒன்றை நிக்ஷேபிப்பதும், கோடல் -
ஆதானம் பண்ணுவதும், மலங்களை - மலமூத்திராதிகளை, துறத்தல் -
விடுதலும், (ஆகிய இவைகளை), செய்யார் - செய்யாதவர்களாயும்,
(அதாவது; ஆதான நிக்ஷேபணாஸமிதியுடையவர்களாயும்), (இவற்றோடு
வியுத்ஸர்க்கஸமிதியுடையவர்களாயும் இந்தப்பஞ்சஸமிதிகளையும்
ஜிவரக்ஷணையின் பொருட்டுப் பொருந்தி), எ-று. (316)
1364. இருத்தலே கிடத்தல் நிற்ற லியங்குதல் முடக்கல் நீட்டல்
திருத்தியெவ் வுயிர்க்கும் தீமை செறிந்திடா வொழுக்க மோம்பி
யுரைத்துயிர்க் குறுதி மார்க்க மோம்புவ கொடுப்பிற் கொண்டும்
பரிக்கதப் பாவை மாரைப் பற்றறத் துறந்திட் டாரே.
(இ-ள்.) இருத்தல் - பரியங்காஸனமாக- உட்கார்ந்திருத்தலாலும்,
கிடத்தல் - சையாஸனமாகப் படுத்திருத்தலாலும், நிற்றல் -
காயோத்ஸர்க்கமாக யோகத்தில் நிற்கின்றதாலும், இயங்குதல் - சரியா
மார்க்கமாகச் செல்கின்றதாலும், முடக்கல் நீட்டல் -
ஹஸ்தபாதாதிகளை முடக்குதலாலும் நீட்டுதலாலும், எவ்வுயிர்க்கும் -
ஸகல ஜீவன்களுக்கும், தீமை செய்திடா - உபஸர்க்கம் செய்யாத,
ஒழுக்கம் - சாரித்திரமாகிய காயகுப்தியை, திருத்தி - செம்மையாகச்
செய்து, ஓம்பி - ரக்ஷித்தும் (அதாவது : காயகுப்தம் செய்தும்),
உயிர்க்கு - பவ்விய ஜீவன்களுக்கு, உறுதி மார்க்கம் - உறுதியாகிய
மோட்ச மார்க்கத்தை, உரைத்து - சொல்லியும் (அதாவது : அதனைச்
சொல்லி வேறு வார்த்தைகளைப் பேசாத தன்மையாகிய வாக்
குப்தியைடந்தும்), ஓம்புவ - ரத்னத்திரய விருத்திக்கு
ரக்ஷணையாகும்படியான ஆகாராதிகளை, (உபசரித தன்மையால்),
கொடுப்பில் - பத்ரசீலர்கள் கொடுத்தால், கொண்டும் -
ஏற்றுக்கொண்டும், பரிக்கதப் பாவைமாரை -
த்வாவிம்சதிபரீஷஹங்களென்னும் உபாதிகளாகிய பாவைமார்களை,
பற்றற - ஆசையற, துறந்திட்டார் - நீக்கினார்கள் (அதாவது : மனோ
குப்தியையும் பொருந்தினார்கள்), எ-று.
(317) |