சமவசரணச்சருக்கம்635


 

1365. நன்மைதீ மைக்கண் ணொத்து நாதன்றன் பாத மோதித்
     தன்மைக்கண் ணின்றார் தம்மைப் பணிந்துதம் பிழைப்பின் மீண்டு
     பின்னைத்தம் பால்வந் தெய்தும் பிழைப்பைமுன் மறுத்துக் காயந்
     தன்னைத்தாம் விட்டு நின்றார் தடவரைச் சூளி யொத்தார்.

     (இ-ள்.) நன்மை தீமைக்கண்ணொத்து - நன்மை தீமைகளிடத்து
ஒரு     தன்மைத்தாகியும், (அதாவது : நன்மை வந்தபோதிலும் தீமை
வந்தபோதிலும்    யதாஸ்வரூபமறிந்து   சமானமாயிருக்கிற ஸாமாயிக
பாவனை செய்தும்),  நாதன் தன் - திரிளோகேஸ்வரனாகிய அரஹந்த
பகவானுடைய,   பாதம் - திருவடிகளை,      ஓதி - சொல்லி ஸ்துதி
செய்தும்,   தன்மைக்கண்ணின்றார் தம்மை - ஸ்வரூபத்திலும் ஸ்வரூப
பாவனையிலுமிராநின்ற    பஞ்ச     பரமேஷ்டிகளை,    பணிந்து -
வணங்குதலாகிய வந்தனை செய்தும், தம் - தங்களுடைய, பிழைப்பின்
- குற்றங்களினின்றும்,   மீண்டும்   - நீங்கியும், (அதாவது : நீங்குதல்
பாவனையாகிய   பிரதிக்கிர  மணஞ் செய்தும்), பின்னை - (அப்படிப்
பிரதிக்கிரமண குணத்திலிருந்தும்) பிறகு கர்மோதய வசத்தால், தம்பால்
- தங்களிடத்தே,   வந்தெய்தும்   -  வந்தடையப்பட்ட, பிழைப்பை -
குற்றங்களை,   முன்    மறுத்து   -  முன்னே மறுத்தும் (அதாவது :
ஆலோசனாதி   பூர்வகமாகிய    விவேக பலத்தினால் பிராயச்சித்த -
விதானஞ் செய்கின்ற பிராயச்சித்த பாவனையடைந்தும்), காயந்தன்னை
- சரீரத்தையும்,  தாம் -அவர்கள் தாம், விட்டு - விடுத்து (அதாவது :
அதனை நமதல்லவென்று மனதில் பாவிக்கின்ற வியுத்ஸர்க்க பாவனை
யடைந்தும்),   நின்றார் - இந்த   ஷடா   வசியக் கிரியைகளில் கூடி
நின்றார்கள்,   (அப்படி  நின்றவர்கள்), தடம் - விசாலம் பொருந்திய,
வரை - பர்வதத்தின்,சூளியொத்தார் - சிகரத்துக் கொருவாறு ஒப்பாகச்
சலனமின்றி நின்றார்கள், எ-று.                            (318)

1366. ஆதப யோகந் தாங்கி யருந்தவர் நின்ற போழ்திற்
     பாதவம் போது கொண்டு பணிந்தன பனியைச் சேரச்
     சீதபங் கயங்கள் கூம்ப விரிந்தசெங் கமலஞ் சிந்தை
     மாதவர் மரத்தைச் சேர மகிழ்ந்துவான் பொழிந்த வன்றே.

     (இ-ள்.) ஆதபயோகம்  - ஆதபயோகத்தை, தாங்கி - தரித்து,
அருந்தவர் - அரிய தபஸையுடைய மேருமந்தரரிருவர்களும், நின்ற -
மலைமேல்   நிற்கின்ற, போழ்தில் - கோடை காலத்திலே, பாதவம் -
விருட்சங்கள், போது கொண்டு - புஷ்பங்களைக் கொண்டு, பணிந்தன
- வணங்கின, பனியைச்சேர- ஹிமத்காலயோகத்தில் நிற்க, (அதாவது :
மறைவு   இல்லாத   கடற்கரை முதலான இடத்தில் வெள்ளாகாசத்தை
யடைந்து   யோகத்தில்    நிற்க),     சீதம் - பனியின் சீதத்தினால்,
பங்கயங்கள் - தாமரை புஷ்பங்கள், கூம்ப - வாடி நாசமெய்த, சிந்தை
- இவர்கள் மானதாகிற, செங்கமலம் - செந்தாமரை புஷ்பம், (ஆத்மத்
தியானத்தினால்),   விரிந்த - மலர்ந்தது,     மாதவர்    -    மஹா
தபத்தையுடைய இவ்விருவர்களும், (அந்த