638மேருமந்தர புராணம்  


 

பொதுவினால்    -    சாமான்யத்தினால்,  அறிவின்  முன்பு - ஞான
குணத்துக்கு முன்னே, புலத்தைக் கொண்டு - இந்திரிய விஷயங்களைக்
கொண்டு, அனேகமாய் - பலவித பேதமாய் சக்ஷுதர்சனாதியாகிய, தன்
விதி     -    தனது அந்த தர்சனாவரணீய கர்மங்கள், அறக்கெட -
முழுமையும்   நீங்க,   ஒன்றாகி - ஒப்பற்றதாகி, விரியுமாறு - அனந்த
தர்சனமென்னும் ஸம்பூர்ண சுத்த தர்சனமாய் ஆத்ம திரவிய குணமாக
வியாபகமாகின்ற   நிஜருசி லக்ஷணமாகி நிராகாரமாகிய குணத்தையும்,
உன்னினார்    - ஸம்மியக்ஞான  தர்சன பலத்தால் ஸ்வஸம் வேதன
பிரத்தியக்ஷத்தால் பாவித்தார்கள், எ-று.                     (323)

1371. சுகதுக்க மோக மாகிச் சுழலுஞ்சே தனசு கத்தைத்
    தகைவைசெய் யந்த ராயந் தம்மொடு மோக நீங்க
    முகைவிட்ட நாற்றம் போல முழுதும்வந் தெழுந்த னந்த
    சுகமற்ற தாகு மென்று துளக்கற நினைந்து நின்றார்.

     (இ-ள்.)   (மேலும்), சேதன சுகத்தை - அதீந்திரிய துருவ சுத்த
சைதன்ய    சுகத்தை,  சுகம் - அநித்திய இந்திரிய சுகமும், துக்கம் -
துக்கமும்,    மோகமாகி     - மயக்கமுமாகி,      தகைவைசெய் -
தடைசெய்கின்ற,   சுழலும் - சுழல்வதாகிய, அந்த  ராயந் தம்மொடு -
பஞ்சப்பிரகார   அந்தராய கர்மங்களோடு, மோகம் - தர்சன சாரித்திர
விகல்பமாகிய மோஹனீய கர்மங்களும், நீங்க - நிரவசேஷமாய் விலக,
முகைவிட்ட நாற்றம்போல - மொக்கவிழ்ந்து மலர்ந்து வெளிப்படுத்திய
வாசனையைப் போல, முழுதும் வந்து - ஆத்மனுக்குத் தனது ஸ்வரூப
முழுக்     குணமும் வந்து, எழுந்து - வியாபகமாகி, மற்றது - அந்தத்
தன்மையானது,    அனந்த     சுகமாகுமென்று          - அனந்த
ஸௌக்கியமாகுமென்று, துளக்கற - சலனமின்றி, நினைந்து நின்றார் -
பாவித்து நின்றார்கள், எ-று.                              (324)

1372. வீரியாந் தராய நீங்க விகலத்தி னீங்கி வீரங்
     காரியங் கடையி லாது கணத்திலே முடித்த ளந்து
     மூரிமூ வுலகந் தன்னை யேந்தலு மாகு மாற்றல்
     வீரிய மாகு மென்றில் விதியுளி நினைந்திட் டாரே.

     (இ-ள்.) (பின்னர்), வீரியாந்தராயம் - வீரியாந்தராய கர்மமானது,
நீங்க     -     ஆத்மனிடத்தினின்றும்      விலக, வீரங்காரியம் -
வீர்யகுணமானது,       விகலத்தினீங்கி - குறைபாட்டினின்றும் நீங்கி,
கடையிலாது   - முடிவில்லாது (ஸம்பூர்ண நிலையாகி), கணத்திலே -
ஒரு    ஸமயத்திலே,      மூரி   - பலமாகிய,  மூவுலகந்தன்னை -
மூன்றுலகத்தையும்,     அளந்து முடித்து - பிரமாணித்து, ஏந்தலும் -
தரித்தலும்,     ஆகும்   - ஆகும்படியான, ஆற்றல் - சக்தியானது,
வீரியமாகுமென்று     - அனந்த வீரிய குணமாகுமென்று, இவ்விதி -
இந்தக்     கிரமத்தையும்,     உளி - உள்ளிட்டு, நினைத்திட்டார் -
தியானித்தார்கள், எ-று.                                  (325)