1373. உருவமு மொலியு மூறு நாற்றமுஞ் சுவையு மின்றாய்த்
தெரிவரு நுண்மைத் தாகி நொற்பமுஞ் சிறப்பு மின்றாய்
மருவிய வினைக ளெட்டும் மாய்ந்தவக் கணத்துச் சென்று
திரிதர வுலகத் துச்சி நிற்றலுஞ் சிந்தித் தாரே.
(இ-ள்.)(அதன் மேல்), மருவிய - (ஆத்மனிடத்தில் அனாதியாக
பாவ கர்மங் காரணமாகச்) சேர்ந்திரா நின்ற, வினைகளெட்டும் -
திரவிய கர்மங்களெட்டும், மாய்ந்தவக் கணத்து - நிரவசேஷவிநாசமான
அந்த ஸமயத்திலே, உருவமும் - ரூபமும், ஒலியும் - சப்தமும், ஊறும்
- ஸ்பரிசமும், நாற்றமும் - கந்தமும், சுவையும் - ரஸமும், இன்றாய் -
இல்லாமல், தெரிவரும் - இந்திரிய ஞானத்தினால் அறிவதற்கு
அரிதாகிய, நுண்மைத்தாகி - சூக்ஷ்மமாகி, நொற்பமும் - லகுத்துவமும்,
சிறப்பும் - குருத்துவமும், இன்றாய் - இல்லாமல், (அதாவது :
அகுருலகுத்துவ குணமுடையதாகி), சென்று - ஊர்த்துவகதி
ஸ்வபாவமாகிச் சென்று, திரிதரா - மறுபடி ஒரு காலும் திரும்பி வராத,
உலகத்துச்சி - மூன்று லோகத்துக்கும் உச்சியாகிய தனுவாதாக்கிரத்தில்
(அதாவது : ஸித்தி க்ஷேத்திரத்தில்), நிற்றலும் - துருவமாகி நிற்கின்ற
ஸ்வரூபத்தையும், சிந்தித்தார் - தியானித்தார்கள், எ-று.
சுத்த ஜீவத் திரவிய ஸ்வரூபம், பிராப்ரதத்திரயத்தில்
தர்சனாதிகாரத்தில் 184 - வது காதையில் சொல்லப்பட்டிருக்கிறது.
தவிரவும் அதே நூலில் பஞ்சாஸ்திகாயாதிகாரத்தில் 27 - வது காதை
முதலாக 79 - வது காதை வரையிலும் சுத்தாசுத்தத்தால் இருவகைப்
பேதமாகிய, ஜீவன்களுடைய ஸ்வரூபமும் தெளிவாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விவரத்தை விளக்கமாகக் காணவேண்டின்
அவற்றைப் பார்த்துணர்ந்து கொள்க. (326)
வேறு.
1374. குணகுணி நிலைமையுங் குணங்க ணிற்றலும்
மனமுடை மற்றவர் தத்தஞ் சிந்தியா
வணவரும் பமாதம்விட் டப்ப மத்தரா
யிணையிலாச் சேணிமே லேறி னார்களே.
(இ-ள்.) (பின்னர்), குணம் - ஜீவாதியாகிய அந்தந்தத் திரவிய
குணங்கள், குணி - குணியாகிய அந்தந்தத் திரவியங்கள்,
(ஆகியவற்றின்), நிலைமையும் - (அதனதன் ஸாமான்ய விசேஷத்தால்
நிற்கின்ற திரவியார்த்திக பரியாயார்த்திக அர்த்த வியஞ்சன
பரியாயங்களின்) தன்மைகளையும், குணங்கள் - (அதனதன்
அஸ்தித்துவாதி திரவியார்த்திக குணங்களால் நித்தியமாயும்
பரியாயார்த்திக குணங்களால் அனித்தியமாயும் ஆகிய ஸகலார்த்த
வியஞ்சன ஸாமான்ய விசேஷ |