ஸ்வருப பரரூப) குணங்கள், நிற்றலும் - (ஸ்யாத்வாத ஸப்தபங்கி
நியாயத்தால் நாம, ஸ்தாபனா, திரவிய பாவங்களால்,
உத்பாதவ்யயத்ரௌவ்யயுக்தமாய்) நிற்கும் தன்மைகளையும், மனமுடை
- ஸ்ரீதஞானபாவனா பலத்தால் மனதிலுடைத்தாகிய, அவர் - அவ்விரு
முனிவர்களும், சிந்தியா - (தங்களுடைய ஆத்ம ஸ்வரூபத்தை
மாத்திரம் ஏகமென்றும் சாஸ்வதமென்றும் ஞான தர்சன நாயகமென்றும்
சேஷங்கள் ஸம்யோகங்களென்றும் ஏகத்துவ அன்னியத்துவ
பிரதக்த்துவ அப்பிரதக்த்துவ ஸ்வரூபங்களைத்) தியானித்து, தத்தம் -
தங்கள், தங்களுடைய, அணவரும் - நெருங்குதற்கரிய, பமாதம் விட்டு
- பஞ்சதச ப்ரமாதங்களை நீக்கி, அப்பமத்தாராய் - அப்பிரமத்த
குணஸ்தானவர்த்திகளாகி, இணையிலா - உபமையில்லாத, சேணிமேல்
- க்ஷபகபேஸ்ரீணி யென்கிற குணஸ்தான வரிசையின் மேல், ஏறினார் -
கிரமமாக ஆரோகணித்தார்கள், எ-று.
மற்று - அசை. (327)
1375. வினைகளேழ் விரகினால் வீழ்ந்த வக்கண
முனிவர்புவ் வாணிநன் முனிவ ராயினார்
வினையெலா நிலைதளர்ந் திட்டு திர்ச்சிக
டனையடைந் திட்டநால் வகையி னாற்பினை.
(இ-ள்.) அக்கணம் - அந்த அப்பிரமத்த குணஸ்தானத்தில்
க்ஷபகபேஸ்ரீணி நிலையில் ஏறிய காலத்து, விரகினால் - கிரமத்தினால்,
வினைகளேழ் - (மித்தியாத்துவ, ஸம்மியக்மித்தியாத்துவ,
ஸம்மியக்த்துவபிரகிருதி, அனந்தானு பந்திகுரோத, மான, மாயா,
லோபமென்னும் தர்சன மோஹனீயமாகிய) ஸப்த பிரகிருதிகள், வீழ்ந்த
- கெட்டன, (அதன் மேல்), முனிவர் - இவ்விரு முனிவர்களும்,
புவ்வாணி நன்முனிவராயினார் - அபூர்வ கரண குணஸ்தான
வர்த்திகளானார்கள், (அந்த அபூர்வ கரண குண ஸ்தானத்தில்),
வினையெலாம் - மற்ற கர்மங்களெல்லாம், நிலை தளர்ந்திட்டு -
தளர்வுபட்டுக்குறைந்து, நால்வகையினால் - (பந்த, ஸத்துவ, உதய,
உதீரணாவென்னும்) நான்கு விதத்தால், உதிர்ச்சிகடனையடைந்த -
நிர்ஜரிக்கின்ற நிலைமையைடைந்தன, பினை - அதன் பின்பு, எ-று.
தனை - சாரியை. (328)
1376. நின்றுழி நிலாதசுக் கிலத்தி யானத்தோ
டன்றவ ரணியட்டி முனிவ ராயினார்
சென்றன சிலபல கணங்கள் சென்றபின்
வென்றனர் வினைகளீ ரெட்டை வீரரே.
(இ-ள்.) நின்றுழிநிலாத - ஒரு விதமாக நின்றவிடத்திலேயே
நில்லாமல் ஸமயந்தோறும் வேறே வேறே விர்த்தியாகி
அவலம்பனமாகின்ற, சுக்கிலத் தியா |