னத்தோடு - பிரதக்த்துவ விதர்க்க வீசாரமென்னும் சுக்கிலத்
தியானத்தோடு கூடி, அன்றவர் - அப்பொழுது அம்முனிவர்கள்,
அணியட்டி முனிவராயினார் - அனிவிர்த்தி கரணகுணஸ்தானத்தை
யடைந்த முனிவராயினார்கள், (அப்படி அனிவிர்த்தி
கரணகுணஸ்தானத்தை யடைந்து அக்குணஸ்தானமாகிய அந்தர்
முகூர்த்தத்தில்), சில பல கணங்கள் - சில கணங்களும் பல
கணங்களும், சென்றன - கழிந்தன, சென்றபின் - அவ்வாறு அனேக
ஸமயங்கள் சென்ற பிறகு, வீரர் - வீர புருஷர்களாகிய அவ்விருவரும்,
(அக்குணஸ்தானத்தில் அந்தியத்தில் ஒன்பது ஸமயமிருக்கும்போது
அதில் பிரதம ஸமயத்தில்), வினைகளீரெட்டை - ஷோடச
பிரகிருதிகளை, வென்றனர் - ஜெயித்தார்கள், எ-று. (329)
வேறு.
1377. தீக்கதி யிரண்ட வற்றப் புவ்விக ணான்கு சாதி
யாக்கையி னிற்ற னுட்பம் பொதுவெயில் விளக்கி வற்றை
யாக்குமன் னாமங் காட்சி யாவரணத் தியானத் தீட்டி
நீக்கரும் பசலை நித்தை யாகுமீ ரெட்டை நீத்தார்.
(இ-ள்.)(எப்படி ஜெயித்தார்களெனில்), தீக்கதியிரண்டு - நரககதி
திரியக் கதி யெனும் இரண்டும், அவற்றப்புவ்விகள் - அவற்றினுடைய
அந்த அனு பூர்வியாகிய நரக கத்யானுபூர்வி திரியக்கத்தியானுபூர்வி
எனும் இரண்டும், நான்கு சாதி - ஏகேந்திரிய ஜாதி த்வீந்திரிய ஜாதி
த்ரீந்திரிய ஜாதி சதுரிந்திரிய ஜாதியென்னும் நான்கும்,யாக்கையினிற்றல்
- ஸ்தாவரமும், நுட்பம் - ஸூக்ஷ்மமும், பொது - சாதாரண சரீரமும்,
வெயில் - ஆதபமும், விளக்கு - உத்யோதமும், (ஆகிய), இவற்றை -
இவைகளை, ஆக்கும் - ஆக்குகின்ற, அந்நாமம் - அந்த நாம கர்ம
பிரகிருதியில் பதின்மூன்றும், காட்சியாவரணம் - தர்சனாவரணீய
கர்மத்தில், தியானத்தீட்டி - ஸ்தியான கிரந்தியும், நீக்கரும் பசலை -
பிரசலா பிரசலையும், நித்தை - நித்திரா நித்திரையும் கூடி,
ஆகுமீரெட்டை - ஆகின்ற பதினாறு பிரகிருதிகளை, நீத்தார் -
மேற்கூறியபடி நீக்கினார்கள், எ-று. (330)
1378. வெகுளியே மான மாய முலோபமா மிக்க நான்கு
பகடியப் பச்ச பச்சக் கணத்ததா மெட்டை நீத்து
முகடுற வெழுந்த சிந்தை முறுக்கிப்பின் னுருக்க ழற்போல்
தொகையுடைப் பேடி வேதந் தன்னையு முடைத்திட் டிப்பால்.
(இ-ள்.) வெகுளியே மானமாயமுலோபமா மிக்க நான்கு -
மிகுதியாகிய குரோதம் மானம் மாயம் லோபம் என்னும்
நாலுவகையான, பகடி - பிரகிருதிகள், அப்பச்ச பச்சக்கணத்ததாம் -
அப்பிரக்தியாக்கியான பிரத்தியாக்கியான கணத்தின் பேதத்தால்
ஆகின்ற, எட்டை - எட்டு பிரகிருதிகளையும், நீத்து - |