சமவசரணச்சருக்கம்643


 

ஸமயத்தில்,      புல்லிதாமுலோபந்தன்னை   -       ஸஞ்ஜுவலன
லோபகர்மத்தை,  வீழ்த்து - கெடுத்து, பின் - பின்பு, (அக்காலத்தில்),
இருபத்தெண்மோக     நீத்து    -  இருபத்தெட்டு     மோகனீயப்
பிரகிருதிகளைத்     தீர்த்து, (அதாவது :   அப்பிரமத்த குணஸ்தான
க்ஷபகஸ்ரீணியாரோகணத்தில்,    தர்சன     மோஹனீயமான ஸப்த
பிரகிருதிகளும்,    பிறகு   அநிவிருத்திகரண குணஸ்தானத்தில் நாம
கர்மத்தில்     பதின்மூன்றும்,      தர்சனாவரணீயகர்மத்தில் மூன்று
பிரகிருதிகளும்,    நீங்கலாக     சாரித்திர மோஹனீயத்தில் இருபது
பிரகிருதிகளும்,    பிறகு    ஸ்ூக்ஷ்ம ஸாம்பராய குண ஸ்தானத்தில்,
சாரித்திர மோஹனீயத்தில் பாக்கி நின்ற ஒரு பிரகிருதியுமாகச் சேர்ந்து
அஷ்டாவிம்சதி    பேதமாகிய மோஹனீய கர்ம பிரகிருதிகளை நிரவ
சேஷம்   தீர்த்து), எல்லையில் - அளவில்லாத, சுத்தி - ஆத்ம சுத்தி
பரிணாமத்தை, பெற்றார் - அடைந்தார்கள், எ-று.             (333)

1381. வெம்பிய வினைக்கு மூல மாகுமோ கத்தை வீழ்த்தா
     ரம்பரப் படிகஞ் செம்பஞ் சடுத்துவிட் டதனை யொத்தா
     ரும்பரொன் றாகுஞ் சிந்தை யுடனின்றோர் மூழ்த்தத் தீற்றின்
     முன்பினாங் கணத்து நித்தை பசலைகண் முறியச் சென்றார்.

     (இ-ள்.)    (மேலும்    அவர்கள்), வெம்பிய - வெப்பமாகிய,
வினைக்கு - கர்மங்களுக்கு, மூலமாகும் - முதலாகின்ற, மோகத்தை -
தர்சன     சாரித்திர      விகல்பமாகிய அஷ்டாவிம்சதி மோஹனீய
கர்மங்களை,     வீழ்த்தார் - கெடுத்தவர்களாகி, அம்பரப் படிகம் -
ஆகாஸ்படிகத்தல்,   செம்பஞ்சு - சிவந்த பஞ்சு, அடுத்துவிட்டதனை
யொத்தார்               -            சேர்ந்துவிட்டதற்கொப்பாக
ஸத்பரிணாமமுடையவர்களானார்கள்,     உம்பர்    -  அதன்மேல்,
ஒன்றாகுஞ்சிந்தையுடன்  - ஏகத்துவ வீதர்க்க வீசாரமென்கிற த்வீதீய
சுக்லத்     தியானத்துடன்,     நின்று   - பொருந்தி  க்ஷீணகஷாய
குணஸ்தானத்தில்    நின்று,    ஓர்    மூழ்த்தத்து ஈற்றின் - அந்தக்
குணஸ்தான காலமாகிய ஓர் அந்தர் முகூர்த்தகாலத்தின் அந்தியத்தில்,
முன்பினாங்கணத்து     - இரண்டு ஸமயத்தில், (முதல் ஸமயத்திலே),
நித்தைபசலைகள்       - நித்திரையும் பிரசலையுமென்னும் இரண்டு
கர்மங்கள்,  முறிய - கெட, சென்றார் - தியானத்தில அடைந்தார்கள்,
எ-று.                                                (334)

1382. ஒருகணங் கடந்த போது ஒருநால்வர் கன்மர் கூடிப்
     பொருகிற வேளை தன்னிற் போதியா வரண மைந்தும்
     மருவிநின் றெதிர்த்த காலத் தந்தரா யந்தா னைந்துந்
     திருகியீ ரெழுவ ரந்தக் கணத்திலே தீர்ந்தா ரன்றே.

     (இ-ள்.) ஒரு  கணங்கடந்தபோது - க்ஷீணகஷாய குணஸ்தான
காலாந்தியத்தில்    பிரதம ஸமயம் முன் சொன்ன இரண்டு கர்மமும்
நீங்கி அந்த ஒரு