644மேருமந்தர புராணம்  


 

கணமும் போகப் பின்பு த்விதீய ஸமயத்தில்,ஒரு நால்வர் கன்மர் கூடி
-     சக்ஷு   தர்சனாவரணீயம்           அசக்ஷுதர்சனாவரணீயம்
அவதிதர்சனாவரணீயம்    கேவலதர்சனா     வரணீயமென்னும் நாலு
கர்மங்களும்    சேர்ந்து,   பொருகிற வேளைதன்னில் - தாக்குகின்ற
அக்காலத்திலேயே,    போதியாவரணமைந்தும் - மதிஞானாவரணீயம்
ஸ்ரீுதஞானாவரணீயம்    அவதிஞானாவரணீயம்         மனப்பரியய
ஞானாவரணயம்     கேவலஞானாவரணீயம்    என்னும்      ஐந்து
பிரகிருதிகளும், மருவி   நின்று - சேர்ந்து நின்று, எதிர்த்த காலத்து -
பொருதுகின்ற     அந்த  ஸமயத்திலேயே, அந்தராயந்தானைந்தும் -
தானாந்தராயம்    லாபாந்தராயம் போகாந்தராயம் உபபோகாந்தராயம்
வீர்யாந்தராயமென்னும் ஐந்து கர்மங்களும், திருகி - சேர்ந்து பொருதி,
அந்தக்     கணத்திலே   - அந்த   க்ஷீணகஷாயகுணஸ்தானாந்திய
ஸமயத்திலே,   ஈரெழுவர் - இந்தப் பதினாலு பேர்களும், தீர்ந்தார் -
கெட்டு நீங்கினார்கள், எ-று.                              (335)

1383. மாலைவா யிருளை நீக்கி வையத்தைப் துயி லெழுப்புங்
     காலைவா யருக்கன் போலக் காதிக ணான்கு நீங்க
     மேலெலா முறங்கு நான்மை விழித்துல கனைத்துங் காண
     மாலிலா மனத்துச் சிந்தை யருக்கன துதித்த தன்றே.

     (இ-ள்.) மாலைவாய்      இருளை - இராத்திரியிற் பொருந்தும்
அந்தகாரத்தை,   நீக்கி - போக்கி, வையத்தை - இந்தப் பூலோகத்துப்
பிராணிகளை,    துயில்    -     நித்திரையினின்றும், காலைவாய் -
பிராதக்காலத்தில், எழுப்பும் - எழுப்புகின்ற, அருக்கன் போல - பால
சூரியனைப்    போல,    மேலெலாம் - ஆத்மப் பிரதேச முழுவதும்,
உறங்கும்    -    தங்கியிருந்த,    காதிகணான்கும் - ஞானாவரணீய
தர்சனாவரணீய மோஹனீயாந்தராயங்க ளென்கிற காதி சதுஷ்டயங்கள்,
நீங்க   - விலக,    நான்மை - அனந்த சதுஷ்டயமானது, விழித்து -
பிரகாசித்து,   உலகனைத்தும் - லோகா  லோக முழுமையும், காண -
கேவல  தர்சனத்தால்    தொய, மாலிலா - மயக்கமில்லாத, மனத்து -
மனதிலே,    சிந்தை   -    சுத்த ஸ்வரூப சுக்கிலத் தியானத்தினால்,
அருக்கனது    - கேவலஞானமென்னும்   சூர்யனானது, உதித்தது -
கிரணத்தினால் வியாபித்து உதயமாகினது, எ-று.

     இதனால்    அவர்கள்     ஸ்வஸ்வரூப   ஞான தர்சன குண
ஸம்பூர்ணமாகிய  யதாக்கியாத சாரித்திரத்தை யடைந்தார்கள் என்பது
பெறப்படும்.                                           (336)

1384. உள்ளெழுந் தீயி னால்வெந் தொளிபெற்ற விறகைப் போல
     வெள்ளையத் தியானந் தன்னால் வெந்தெரி யுமிழ மேனி
     பள்ளிகொண் டிடுதல் மூத்தல் பசித்தனோய் வேட்கை யின்றிப்
     பிள்ளையா தித்தன் போல பிறப்பிரு டூர்த்தி ருந்தார்.