(இ-ள்.) (பின்னர் அவர்கள்), உள் - உள்ளே, எழும் - பற்றி
வியாபித்த, தீயினால் - அக்கினியினால், வெந்து - எரிதலுற்று, ஒளி
பெற்ற - பிரகாசம் பொருந்திய, விறகைப் போல - காஷ்டத்தை
யொப்ப, வெள்ளையத் தியானந்தன்னால் -
சுக்கிலத்தியானாக்கினியினால்,வெந்து - கர்மங்கள் எரிந்து, எரியுமிழ -
ஆத்மப்பிரகாசம் தோன்ற, மேனி - சரீரமானது, பள்ளி கொண்டிடுதல்
- சயனித்தலும், மூத்தல் - விருத்தாவஸ்தை யடைவதும், பசித்தல் -
க்ஷுத்பாதாதி பீடி தங்களும், நோய் - வியாதிகளும், வேட்கை -
ஆசையும், இன்றி - இல்லாமல், பிள்ளையாதித்தன் போல -
பாலசூரியனைப் போல, (தோன்ற ஆத்ம ஜோதியால்), பிறப்பிருள் -
ஸம்ஸாரத்தில் தோன்றிச் சுழலும்படியான அந்தகாரத்தை, துர்த்து -
நீக்கி, இருந்தார் - வீதராக சுத்தோபயோகிகளாகி யிருந்தார்கள்,
எ-று. (337)
1385. பயம்பகை பணித்த லார்வஞ் செற்றமே கவர்ச்சி சோகம்
வியந்திடல் வெகுளி சோபம் வேர்த்திடல் விரும்பல் கேதம்
மயங்குதல் தெளிதல் சிந்தை வருந்துதல் களித்தல் மாயம்
இயம்பருந் திறத்த வின்ன யாவையு மெறிந்த ருந்தார்.
(இ-ள்.) (இன்னும்), பயம் - அச்சமும், பகை - விரோதமும்,
பணித்தல் - ஏவலிடுதலும், ஆர்வம் - அன்பும், செற்றம் -
துவேஷமும், கவர்ச்சி - ஒற்றைக் கிரகிக்கும் குணமும், சோகம் -
சோர்வும், வியந்திடல் - ஆச்சரியப்படுதலும், வெகுளி - கோபமும்,
சோபம் - அலங்கரிப்பும், வேர்த்திடல் - வேர்வை விடுதலும்,
விரும்பல் - ஒன்றைக் கருதுவதும், கேதம் - துக்கமும், மயங்குதல் -
கலங்குதலும், தெளிதல் - ஆராய்ந்தறிதலும், சிந்தை வருந்துதல் -
மனதிற் கஷ்டமுறுவதும், களித்தல் - சந்தோஷப்படுவதும், மாயம் -
வஞ்சமும், (ஆகிய), இயம்பரும் - சொல்லுதற்கரிய, இன்ன -
இத்தன்மையாகிய, யாவையும் - ஸகல விபாவங்களையும்,
எறிந்திருந்தார் - கெடுத்து நின்றார்கள், எ-று. (338)
1386. ஆயிடை யமரர் தங்கண் முடியொடா சனந்து ளங்கப்
பாயநல் லவதி யென்னும் பருதியாற் கண்ட தெல்லாம்
ஆயிரங் கண்ணி னானை யதிபதி யாகச் சூழ்ந்து
மாயிரும் விசும்பும் மண்ணும் மறையவா னவர்கள் வந்தார்.
(இ-ள்.) ஆயிடை - அப்பொழுது, அமரர்தங்கள் -
சதுர்ணிகாயாமரர்களுடைய, முடியொடு - கிரீடங்களோடு, ஆசனம் -
இருக்கும் ஆஸனங்களும், துளங்க - சலிக்க, பாய - பரவிய, நல் -
நன்மையாகிய, அவதியென்னும் - அவதிஜ்ஞானமென்னும், பருதியால்
- ஒளியால், (அவர்கட்கு), எல்லாம் - யாவும், கண்டது - தெரிந்தது,
(அவ்வாறு விளங்கிய மாத்திரத்தில் அப்பொழுதே), ஆயிரங்
கண்ணினானை - ஸஹஸ்ராக்ஷனாகிய ஸௌதர்மேந்திரனை,
அதிபதியாக - |