650மேருமந்தர புராணம்  


 

வும்,    உயர்வற    உயரிய   -  தமக்கு  மேலான  உபமையில்லாத
மேம்பாடுடையனவும், (ஆகிய), நும்  -   உங்களுடைய, துணையடி -
பாதங்களை,  தொழுதும்  - வணங்குகின்றோம், (என்று துதித்தார்கள்),
எ-று.                                                 (348)

1396. இனையன துதியினோ டிமையவ ரிறைவரை
     மனமலி யுவகையின் வழிபடு முறைநாள்
     வினைவழி யாமும்மை யோகுவி யோகுசெய்
     கனமலி யூணில யோகிக ளானார்.

     (இ-ள்) இனையன   -  இத்தன்மையனவாகிய,  துதியினோடு -
தோத்திரங்களுடன்,   இமையவர் - சதுர்ணிகாயமார்கள், இறைவரை -
நாதர்களாகிய   இங்விருஜினர்களையும்,  மனமலி - மனதில் நிறைந்த,
உவகையின்  - ஸந்தோஷத்தினால், வழிபடும் முறைநாள் - முறையாக
வணங்கிச்  செல்கின்ற காலத்தில், (அவர்கள்), வினைவழியாம் - கர்ம
வழியாகிய,   மும்மையோகு    -   மனவரனகாயமென்னும்   கர்மக்
கூட்டங்களை,   வியோகுசெய்  - நீக்குதல்    செய்கின்ற, கனமலி -
உயர்ச்சி    பொருந்திய,    ஊணில்   -  இதரபுத்கலஸ்வீகாரமாகாத,
அயோகிகளானார்   -    அயோகிகேவலி குணத்தை யடைந்தார்கள்,
எ-று.                                                 (349)

1397. ஆயிடை யைந்தினோ டெண்பது வெவ்வினை
     மாய வெழுந்து கணத்துல குச்சியை
     மேயினர் விண்ணவர் மண்ணவர் மேனிகட்
     காய சிறப்பொடு வந்தன ரங்கே.

     (இ-ள்.)  ஆயிடை   -   அந்த அயோகி கேவலி குணஸ்தான
காலமான    அந்தர்   முகூர்த்தாந்தியத்தில்,     ஐந்தினோடெண்பது
வெவ்வினை  - வெவ்விய அகாதி கர்மங்களாய் நின்ற எண்பத்தைந்து
பிரகிருதிகள்,   மாய   - கெட,    எழுந்து - ஆத்மன் ஊர்த்துவகதி
ஸ்வபாவனாக,  கணத்து   -  அந்த ஸமயத்திலேயே, உலகுச்சியை -
மூன்று லோகத்துக்கும் உச்சியாகிய ஸித்தி க்ஷேத்திரத்தில், மேயினர் -
பொருந்தினார்கள்,   (அப்பொழுது),    விண்ணவர்   - தேவர்களும்,
மண்ணவர்    -    மனிதர்களும், மேனிகட்கு - பரிநிர்வாணமடைந்த
அவர்களுடைய   சரீரங்களுக்கு, ஆய - செய்யும்படி முறைமையாகிய,
சிறப்பொடும்   - பூஜாதிரவியத்தோடும்,  அங்கே  - அவ்விடத்திலே,
வந்தனர் - வந்தார்கள், எ-று.                             (350)

வேறு.

1398. பொன்னரி மாலை சாந்தஞ் சுண்ணம்பூ மாலை தூம
     மின்னன பலவு மேந்தி யிமையவ ரிறைஞ்சு மெல்லை
     மின்னென முனிவர் மேனி மறைந்தன வியந்து நோக்கிப்
     பன்னருந் துதிய ராகி வானவர் பணிந்து போனார்.