(இ-ள்.) பொன்னரிமாலை - பொன்னாலாகிப் பிரகாசிக்கின்ற
மாலைகளும், சாந்தம் - சந்தனாதிகளும், சுண்ணம் -
கந்தப்பொடிகளும், பூமாலை - புஷ்பமாலை முதலியவைகளும், தூமம்
- அகில் தூபம் முதலியவைகளும், (இன்னும்), இன்னன -
இத்தன்மையனவாகிய, பலவும் - அனேக வஸ்துக்களும், ஏந்தி - மேற்
கூறியபடி தாங்கிக்கொண்டு வந்து அர்ச்சித்து, இமையவர் - தேவர்கள்,
இறைஞ்சுமெல்லை - பரிநிர்வாண பூஜையை விதிப்படி செய்து
வணங்குகின்ற காலத்தில், முனிவர் மேனி - இவ்விரு முனிவர்களாகிய
மேருமந்தரரென்னும் பட்டாரகர்களது சரீரங்கள், மின்னென -
தோன்றிமறையும் மின்னற் கொடியைப்போல, மறைந்தன -
அத்திர்சயமாயின, (அப்பொழுது), வானவர் - தேவர்கள், வியந்து
நோக்கி - ஆச்சரியத்தையடைந்து பார்த்து, பன்னரும் -
சொல்லுதற்கரிய, துதியராகி - ஸ்துதிகளையுடையராகி, பணிந்து -
வணங்கி, போனார் - தமதிடமடைந்தார்கள், எ-று. (351)
வேறு.
1399. முடிவிலாத் தடுமாற்ற முதல்கிழிய மூவமிர்த முறையிற் றோன்றி
யிடையிலாம் வினைமுதலா மோகமெறிந் தார்வமிலா வியல்பிற் றோன்றிக்
கடையிலாக் காதிகெடக் காட்சிவலி யறிவின்பங் கண்ணே தோன்றித்
தொடர்வெலா மறவெறிந்து தோன்றிநாற் குணத்திலுநற் சுயம்பு வானார்.
(இ-ள்.) (அதன் மேல் மேருமந்தரர்கள்), முடிவிலா -
அளவில்லாமலனாதியாகிய, தடுமாற்றம் - சம்ஸாரத்துக்கு, முதல் -
காரணமாகிய மித்தியாத்துவமென்னும் தர்சன மோஹனீயமானது, கிழிய
- கெட, மூவமிர்தம் - ஸம்மியக் தர்சன ஞான சாரித்திரமென்னும்
ரத்னத்திரயமாகிய மூவமிர்தங்கள், முறையிற்றோன்றி - லப்திபஞ்சக
வசத்தினாற் கிரமமாகச் கூடி, யிடையிலாம் - ஆத்மனிடத்திலாகின்ற,
வினை முதலாம் - கர்ம காரணமாகிய, மோகமெறிந்து - சாரித்திர
மோஹனீயத்தையுங் கெடுத்து, ஆர்வமிலா - விபாவமாகிய
ராகத்துவேஷமில்லாத, இயல்பிற்றோன்றி - ஸ்வபாவ பரிணதியில்
தோன்றி, கடையிலாக்காதிகெட - முடிவில்லாத காதி கர்மமான மற்ற
ஞானாவரண தர்சனாவரண அந்தராயங்களும் கெட, காட்சி - அனந்த
தர்சனமும், வலி - அனந்த வீர்யமும், அறிவு - அனந்த ஞானமும்,
இன்பம் - அனந்த ஸௌக்கியமும், கண்ணே - தம்மிடத்திலே,
தோன்றி - உண்டாகி, தொடர்வெலாம் - மறுபடியும்
சம்பந்தங்களாயிராநின்ற அகாதி கர்மங்களெல்லாம், அற -
நீங்கும்படியாக, எறிந்து - கெடுத்து, நாற்குணத்திலுந் தோன்றி -
அவ்வியாபாதத்துவம் அதிஸூக்ஷ்மத்துவம் அகுருலகுத்து |