வம் அவககனத்துவம் என்னும் நாலு குணங்களிலும் தோன்றி, நல் -
நன்மையாகிய, சுயம்புவானார் - சுத்த நிச்சய ஸ்வரூபமானார்கள்,
எ-று. (352)
1400. மணமலிந்த ஒளியெனவு மலர்நிறைந்த விரையெனவும் மல்கு சந்தின்
துணியுமிழ்ந்த தண்மையினுந் தோன்றியவப் பேரின்பத் துள்ளே தோன்றி
யிணைபிறிது மிலராகி யிமையவரும் மாதவரு மிறைஞ்சி யேத்தப்
பணிவரிய சிவகதிய னமர்ந்திருந்தா ரறவமிர்த முண்டா ரன்றே.
(இ-ள்.) (இன்னும்), அறவமிர்தமுண்டார் - தர்மாமிருதத்தைக்
கேட்டு அனுபவித்த இவ்விருவர்களும், மணி - ரத்தினத்திலே, மலிந்த
- நிறைந்த, ஒளியெனவும் - பிரகாசம்போலவும், மலர் - புஷ்பத்திலே,
நிறைந்த - வியாபித்திரா நின்ற, விரையெனவும் - வாஸனைபோலவும்,
மல்கு - நறுமணம் நிறைந்த, சந்தின் துணி - சந்தனக் கட்டையானது,
உமிழ்ந்த - சொரிந்த, தண்மையினும் - குளிர்ச்சியைப்போலவும்,
தோன்றிய - ஆத்மஸ்வபாவமாக உண்டாகிய, அப்பேரின்பத்துள்ளே
தோன்றி - அந்தப் பெரிதாகிய அனந்தஸௌக்கியத்திலே விளங்கி,
இணைபிறிது மிலராகி - உபமாதீதர்களாகி, இமையவரும் -
தேவர்களும், மாதவரும் - கணதராகி மஹா முனிவர்களும், இறைஞ்சி
- வணங்கி, ஏத்த - தோத்திரம் செய்ய, பணிவரிய - தாழ்வில்லாத,
சிவகதியில் - மோட்ச கதியில், அமர்ந்திருந்தார் - பொருந்தி
நின்றார்கள், எ-று. (353)
வேறு.
1401. மதுரைநல் லிராமை தேவன் மலையிற்சீ தரைகா விட்டத்
ததிர்கழ லமரன் பின்னு மரதன மரதன மாலை வானேன்
விதியினா லச்சு தைக்கண் வீதபீ தன்னி லாந்தைக்
கதிபதி யாதித் தாபன் மேருநல் லகதி வேந்தன்.
(இ-ள்.) (மேருவென்பவன்), மதுரை - ஆதியில் மதுரையென்கிற
பிராம்மண ஸ்த்ரீயாய், (பிறகு), நல் - நன்மையாகிய, இராமை -
இராமதத்தா தேவியாகிய, (அதன் பிறகு), தேவன் - பாஸ்கரப்
பிரபனென்னும் நாமமுடைய தேவனாகி, (கற்பத்திற்றோன்றிப் பிறகு),
மலையில் - விஜயார்த்த பர்வதத்தில், சீதரை - ஸ்ரீதரை யென்னும்
ஸ்த்ரீயாய், (பின்பு), காவிட்டத்து - காபிஷ்ட கல்பத்திலே, அதிர் -
சப்தியாநின்ற, கழல் - வீரகண்டயத்தை யணிந்த, அமரன் -
தேவனாகித் |