தோன்றி, பின்னும் - அதன் பின் அரதன மாலை - இரத்தினமாலை
யென்னும் ஸ்த்ரீயாகப் பிறந்து, (அதன் பின்னும், விதியினால் -
கிரமத்தினால், அச்சுதைக் கண் - அச்சுதகல்பத்திலே, வானோர் -
தேவனாகப் பிறந்து, (அதன் பின்பு), வீதபீதன் - வீதபயனென்னும்
பெயர்பெற்ற பல தேவனாகிப் பிறந்து, (பிறகு), லாந்தைக்கதிபதி -
லாந்தவகல்பத்துக்கதிபதியாகி, ஆதத்தாபன் - ஆதித்யாபன் என்னும்
பெயர் பெற்று, (பின்பு), மேரு - மேருவென்னும் பெயருடையவனாய்
மனுஷ்ய கதியிற்றோன்றி, நல் அகதிவேந்தன் - (இனிப் பிறக்கின்ற
கதியில்லாது) நன்மையாகிய மோட்சத்தையுற்றுத் திரிலோக
பூஜ்யனாகும் தன்மையடைந்தான், எ-று. (354)
1402. வாருணி பூர சந்தன் வானவன் மங்கை வானோன்
ஏரணி யிரத னாயு தன்னச்சு தன்வி பீடண
னாரழல் நரகன் வேந்த னமரன்பின் சயந்த னம்பொற்
றாரணி தரணன் பைந்தார் மந்தரன் சிவக திக்கோன்.
(இ-ள்.) (மந்தரனென்பவன்), வாருணி - வாருணியென்னும்
பிராம்மண புத்திரியாக இருந்து, (பின்பு), பூரசந்தன் - பூர்ணச்
சந்திரனாகிய அரசகுமாரனாகி, (பின்பு), வானவன் - தேவனாகிப்
பிறந்து, (பின்பு), மங்கை - யசோதரை யென்னும் ஸ்த்ரீயாக ஜனித்து,
(மறுபடி), வானோன் - தேவனாகி, (பின்பு), ஏரணி - அழகையணிந்த,
இரதனாயுதன் - இரத்தினாயுதனென்னும் ராஜகுமாரனாகி, (பின்பு),
அச்சுதன் - அச்சுத கல்பத்துத் தேவனாகி, (பிறகு), விபீடணன் -
விபீஷணனென்னும் வாஸுதேவனாகிப் பிறந்து (பின்பு),ஆர் - நிறைந்த,
அழல் - அக்கினியையுடைய, நரகன் - நரகனாய்ப் பிறந்து, (அங்கு
நின்றும் பூமியில் வந்து), வேந்தன் - ஸ்ரீ தாமாவென்னும் அரசனாகி,
(மறுபவத்தில்), அமரன் - பிரம்மகல்பத்திற்றேவனாகித் தோன்றி, பின்
- பின்பு, சயந்தன் - ஸயந்தனென்னும் ராஜபுத்திரனாகி, (மறுபடி),
அம்பொன் - அழகிய பொன்னாலாகிய, தாரணிதரணன் -
மாலைகளணிந்த தரணேந்திரனாகி, (மறுபவத்தில்), பைந்தார் -
பசுமைபொருந்திய மாலைகளை யணிந்திராநின்ற, மந்தரன் -
மந்தரனென்னும் இராஜகுமாரனாய்ப் பிறந்து, (தபம்செய்து),
சிவகதிக்கோன் - மோட்சகதியிலுற்றுத் திரிளோக பூஜ்யனான
சாசுவதப்பதவியை யடைந்தவனானான், எ-று. (355)
வேறு.
1403. இனையது வெகுளியி னியல்பு மாற்றியல்
பினையது வினைகளி னியல்பு பற்றியல்
பினையது பொருளின தியல்பு வீட்டியல்
பினையது திருவறத் தியல்பு தானுமே. |