(இ-ள்.) வெகுளியினியல்பு - குரோதத்தினாலாகின்ற
ஸ்வபாவமானது, இனையது - இப்புராணத்தில் சொல்லப்பட்ட
சத்தயகோஷன் முதலானவர்களின் சரித்திரத்திற் கூறிய
இத்தன்மையானது, மாற்றியல்பு - ஸம்ஸாரப் பிறப்புகளின் இயல்பும்,
இனையது - இந்தப் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற
இத்தன்மையானது, வினைகளின் இயல்பு - கர்மங்களினுடைய
ஸ்வரூபமும், இனையது - இத்தன்மையதாகும், பற்றியல்பு -
லோபமாகிய ஆசையின் இயற்கையும், இனையது - இதில்
சொல்லப்பட்ட இத்தன்மையாகும், பொருளினதியல்பு - ஜீவாதி
திரவியங்களின் ஸ்வரூபங்களும், இனையது - இத்தன்மையதாகும்,
வீட்டியல்பு - மோட்சத்தினது இயல்பும், இனையது -
இத்தன்மையதாகும்,
திருவறத்தியல்பு தானும் - ஸ்ரீஜின தர்மத்தினது
விதமும், இனையது - இதிற்சொன்ன இத்தன்மையதாகும், எ-று.
இரண்டமடியிலும் மூன்றாமடியிலுமுள்ள இனையதென்பது முடிபு
நோக்கித் தீபகமாக இரண்டிரண்டிடங்கட்குக் கூட்டப்பட்டது. (356)
1404. அறமல துறுதிசெய் வார்க டாமிலை
மறமலா திடர்செய வருவ தும்மிலை
நெறியிவை யிரண்டையும் நினைந்து நித்தமுங்
குறுகுமி னறநெறி குற்ற நீங்கவே.
(இ-ள்.) அறமலது - தர்மமேயல்லாமல், உறுதி செய்வார்கள்
தாம் - ஆத்மனுக்கு உறுதியான தன்மை செய்பவர்கள், இலை -
இல்லை, மறமலாது - பாபமேயல்லாமல், இடர் செய வருவதும் -
துன்பஞ் செய்ய வருவதும், இலை - வேறில்லை, நெறியிலை
யிரண்டையும் - இவ்விரு மார்க்கங்களையும், நினைந்து -
மனதிலெண்ணி, நித்தமும் - நாள்தோறும், குற்றம் நீங்க -
பாபகாரணமாகிய ராகத்துவேஷ மோஹாதி குற்றங்கள் விலகும்படியாக,
அறநெறி - தர்மாமருதமாகிய ஸம்மியக் தர்சனாதிரத்னத் திரயமாகிற
மோட்சமார்க்கத்தை, குறுகுமின் - ஜீவர்களே! அடையுங்கள்,
எ-று. (357)
1405. ஆக்குவ தேதெனி லறத்தை யாக்குக
போக்குவ தேதெனில் வெகுளி போக்குக
நோக்குவ தேதெனில் ஞான நோக்குக
காக்குவ தேதெனில் விரதங் காக்கவே.
(இ-ள்.) ஆக்குவது - செய்யும்படியான காரியமானது, ஏதெனில்
- என்னவென்றால், அறத்தை - ஸ்ரீஜின தர்மத்தையே, ஆக்குக -
செய்க, போக்குவது - நீக்க வேண்டியது, ஏதெனில் -
என்னவென்றால், வெகுளி - கோபத்தை, போக்குக - நீக்குக,
நோக்குவது - பார்க்கவேண்டியது, ஏதெனில் - என்னவென்றால்,
ஞானம் - |