தீயினன் - அக்கினியையுடைய வித்துத்தந்தன், விரைந்து -
சீக்கிரமாக, மாரி போல் - மழைபெய்வதுபோல, பலமலை -
பலமலைகளை, எடுத்து - தூக்கி, எறிந்தனன் - எறிந்தான், எறிய -
அப்படி யெறியவும், வீரன் - சஞ்சயந்தமுனி, மேற்செல்லும் -
வித்துத்தந்தன் மேலே செல்லும், வெகுளியை - கோபத்தை, விலக்கி -
இல்லாமல் நீக்கி க்ஷமைகொண்டு, பன்னூறு வாரம் - இப்படிப் பல
நூறு தடவை, சென்றபின் - சென்றபிற்பாடு, பமத்தினை -
பிரமத்தகுணஸ்தானமாகும் தன்மையை, பறித்து - நீக்கி, எறிந்திட்டான்
- தள்ளினான் (அதாவது : அப்பிரமத்த குணஸ்தானத்தை யேறினான்),
எ-று. (22)
163. விண் புதைக்கவெஞ் சரமவன் பொழிந்தனன் விண்ணோர்
கண் புதைத்துமெய்ம் மயங்கினர் முனிவனு மறிவன்
பண்பு மெய்த்தவர் தன்மையு நூலையும் பார்க்குங்
கண்பு தைக்குமோ ரெழுவரை யக்கணத் தழித்தான்.
(இ-ள்.) அவன் - அவ்வித்துத்தந்தன், (மேலும்) வெம் -
வெப்பம்பொருந்திய, சரம் - பாணங்களை, விண்புதைக்க -ஆகாயமும்
மறையும்படியாக, பொழிந்தனன் - சொரிந்தான், விண்ணோர் -
தேவர்கள், கண்புதைத்து - கண்ணை மூடிக்கொண்டு,
மெய்ம்மயங்கினர் - தேகத்தில் பிர்மித்தார்கள், முனிவனும் -
சஞ்சயந்தமுனியும், அறிவன் - அருகத் பரமேஸ்வரனது, பண்பும் -
குணமும், மெய்த்தவர் - மஹா முனிகளாகிய சாதுக்களது, தன்மையும்
- குணமும், நூலையும் - பரமாகமத்தையும் (இந்த ஆப்த ஆகம
குருக்களென்னும் மூன்றினுடைய தன்மையையும்), பார்க்கும் -
பார்க்கும்படி யான, கண் - தரிசனத்தை, புதைக்கும் - மறைக்கும்,
ஓரெழுவரை - சப்தபிரகிருதிகளை, அக்கணத்து - அத்தருணத்தில்
அந்த அப்பிரமத்த குணஸ்தானத்திலே நின்று, அழித்தான் -
கெடுத்தான் (அதாவது : வராமல் விலக்கிவிட்டான்), எ-று.
இதனால் சுத்தாத்ம தியானம் நிலைத்த தென்பது பெறப்படும். (23)
164. கவ்வை நூற்றுட னெரிகனல் கடுகினன் கடுக
வெவ்வந் தீர்முனி வினைகளை யழிப்பனென் றெண்ணா
பவ்வ நூறுநூ றாம்வினைப் பகைநிலை தளர்த்தான்
புவ்வி யோடுநின் றணியட்டி தன்னையும் புணர்ந்தான்.
(இ-ள்.) எரிகனல் - எரிகின்ற அக்கினிபோன்ற, நூற்று -
நூற்றுக்கணக்காகிய, கவ்வை - துன்பங்களை, உடன் - உடனே,
(அவ்வித்துந்தந்தன்) கடுகினன் - சீக்கிரமாகச் செய்தான், கடுக -
அவ்வாறு சீக்கிரமாகச் செய்ய, எவ்வந்தீர் - குற்றம் நீங்கிய, முனி -
முனிவரனும், வினைகளை - கருமங்களை, அழிப்பனென்று - கெடுப் |