82மேருமந்தர புராணம்  


 

அந்தராயம்     ஐந்தாவன :-    தானாந்தராயம்,     லாபாந்தராயம்,
போகாந்தராயம், உபபோகாந்தராயம், வீரியாந்தராயம் என்பனவாம்.

மற்று - அசை.                                          (29)

வேறு.

 170. காதி நாலர சழிந்தன வழிதலுங்
         கைவல வொரு நான்மை
     போதி யாதிகள் புணர்ந்தன புணர்தலும்
          புகழ்ந்துல கொருமூன்றும்
     சோதி மாமலர் சொரிந்துவந் தடைந்தன
          ரடைதலுந் துயரெய்தித்
     தீது செய்தவன் றிகைத்தனன் றிகைத்திடா
          நிலத்திடைப் போய் வீழ்ந்தான்.

     (இ-ள்.)   காதி  - காதிகர்மங்களாகிற, நாலு - (ஞானாவரணீய
தரிசனாவரணீய மோஹநீய    அந்தராய  மென்னும்) நாலுவிதமாகிய,
அரசு - கர்மராஜ்யங்கள், அழிந்தன- இவ்வாறு கெட்டன, அழிதலும் -
இப்படிக்கெடவும்,   கைவல   -   கைவல்லியமாகிற, ஒரு - ஒப்பற்ற,
போதியாதிகள் -   ஞான    முதலாகிய,  நான்மை - (அனந்த ஞான
அனந்த தரிசன அனந்த   ஸுஹ   அனந்த வீரியமென்னும்) அனந்த
சதுஷ்டயங்கள்,    புணர்ந்தன -  சேர்ந்தன, புணர்தலும் - அங்ஙனம்
சேர்தலும், புகழ்ந்து -    புகழ்ந்து,    உலகு     ஒரு    மூன்றும் -
மூன்றுலகத்திலுமுள்ள   தேவர்கள், சோதி - பிரகாசமாகிய, மாமலர் -
மிகுதியாகிய புஷ்பங்களை,  சொரிந்து - பொழிந்து, வந்தடைந்தனர் -
வந்து சேர்ந்தார்கள்,   அடைதலும்    -     அங்ஙனம்  சேர்தலும்,
தீதுசெய்தவன் -   பொல்லாங்குசெய்த  வித்துத் தந்தன், துயரெய்தி -
துன்பமடைந்து,  திகைத்தனன் - பிரமித்தான், திகைத்திடா -அவ்வாறு
பிரம்மித்து, (பின்பு), போய் - கொஞ்ச தூரத்தில் போய், நிலத்திடை -
பூமியின் மேல், வீழ்ந்தான் - வீழ்ந்து கிடந்தான், எ-று.          (30)

வேறு.

 171. பகலவ னெழுச்சியிற் பவணர் தோன்றினார்
     இகலிடத் தவர்களெண் டிசையு மீண்டினார்
     முகைமலர் சொரிந்துமே லவர்கண் மூடினார்
     இகலொறுத் தவன்செப்பின் மணியை யொத்தனன்.

     (இ-ள்.) பகலவன் - சூரியனுடைய, எழுச்சியில் - உதயம்போல்,
பவணர் - பவணதேவர்கள்,   தோன்றினார்   - கீழ்நின்றும் வந்தார்கள்,
இகலிடத்தவர்கள் -