சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 83


 

இம்     மத்திம   லோகத்திலிராநின்ற  வியந்தரஜோதிஷ்கதேவர்கள்,
எண்டிசையும் - எட்டுத்திக்குகளிலும், ஈண்டினார் - நெருங்கினார்கள்,
முகை - கூட்டமாக,  மலர் - புஷ்பங்களை,   சொரிந்து - பொழிந்து,
மேலவர்கள் -  கல்பவாஸிதேவர்கள், மூடினார் - வந்து மூடினார்கள்,
இகல் -  கருமங்களின்   பராக்கிரமத்தை, ஒறுத்தவன் - தண்டித்துக்
குறைத்து    நீக்கின    சஞ்சயந்த பட்டாரகன், செப்பின்மணியை -
செப்புக்குள்ளிராநின்ற    இரத்தினத்தை,   ஒத்தனன் - நிகர்த்தான்,
எ-று.                                                 (31)

வேறு.

172. தாம நான்றன சந்தன மெழுகின சருபலத் தான்வந்த
    தூம மார்ந்தன சுடர்விளக் கெரிந்தன சொரிந்தன மலர்மாரி
    வாம வாரியின் வால்வளை யரிசியின் மங்கையர் நடமுன்னாக்
    காம வேளைவென் றிருந்தவன் றிருந்தடி பணிந்துடன றுதிசெய்தார்.

     (இ-ள்.)  (அவர்களெல்லோரும்  வந்து கூடியபின்   சஞ்சயந்த
பட்டாரகர்     இருந்த       ஸ்தானத்தில்)       தாமம்நான்றன -
(மேலிடங்களெல்லாம்)       பூமாலை     முதலிய       மாலைகள்
தொங்கவிடப்பட்டன,    சந்தனம்   - சந்தனக்குழம்பால், மெழுகின -
கீழிடங்களெல்லாம்     மெழுகப்பட்டன,   சரு - (தேவநிர்மிதமாகிய
அல்லது நிர்மாபணமாகிய)     பலகாரவகைகளோடும்,   பலத்தான் -
பழவகைகளோடும்,  வந்த  - வரப்பட்ட, தூமம் - அகில்தூபங்களும்,
ஆர்ந்தன - நிறைந்தன,  சுடர் - பிரகாசியாநின்ற, விளக்கு - இரத்தின
தீபம் முதலியவைகளும்,    எரிந்தன -     பிரகாசித்தன, மலர்மாரி -
புஷ்பவருஷங்கள்,     சொரிந்தன   - பொழியப்பட்டன, வாரியின் -
ஸமுத்திரத்திலுண்கிய,    வாமம் -    அழகிய,     வளை - சங்கின்
வர்ணம்போல், வால் - வெளுப்பாகிய,    அரிசியின்   -   அக்ஷதை
அரிசிகளையுடைய    (அதாவது :   அக்ஷதைகளால் அர்ச்சிக்கின்ற),
மங்கையர் - தேவரம்பையரின், நடம்முன்னா - நர்த்தனத்துக்கெதிரில்,
காமவேளை - மன்மதனை    (அதாவது :   மோஹநீய கருமத்தை),
வென்று - ஜெயித்து,    இருந்தவன்    -  இராநின்ற வீதராகனாகிய
சஞ்சயந்த பட்டாரகனுடைய,    திருந்து     - திருத்தமாகிய, அடி -
பாதங்களை,பணிந்து -வணங்கி, உடன் -ஒரு தன்மையாக (அதாவது :
ஒற்றுமையாக),   துதி - ஸ்தோத்திரங்களை, செய்தார் - (எல்லோரும்
கீழ்வருமாறு) செய்தார்கள், எ-று.

     "வாமவாரியின்   வால்வளை  யரியினமங்கையர்   நடமுன்னா"
எனக்கொண்டு  "வெள்ளிய சங்கு  வளையலையும் பாதச்சிலம்புகளையு
மணிந்த மங்கையர் நடனத்தின்  முன்பாக" என்று பொருள்கொள்ளினு
மமையும்.                                               (32)

 173. விதிக ணான்கையுங் கடந்தனை யடைந்தனை
                விகலமி லொரு நான்மை