84மேருமந்தர புராணம்  


 

 மதிக ணான்கையுங் கடந்தனை யடைந்தனை
      யுலகெலா மதி யொன்றிற்
 கதிக ணான்கையுங் கடந்தனை யடைந்தனை
      யகதியைக் கதி யின்றித்
 துதிக ணான்கையுங் கடந்ததோர் துறவுடைச்
      சுகதவெம் பெருமானே.

     (இ-ள்.)விதிகள் நான்கையும் - காதிசதுஷ்டயங்களை,கடந்தனை
- தாண்டினாய், விகலமில் - குற்றமில்லாத, ஒரு - ஒப்பற்ற, நான்மை -
அனந்த   சதுஷ்டயத்தை,   அடைந்தனை    - அடைந்தாய், மதிகள்
நான்கையும் -     (மதி,    சுருத,   அவதி,   மனப்பரிய மென்னும்)
நான்குஞானங்களையும்,  கடந்தனை  - தாண்டினாய், உலகு எலாம் -
லோகாலோக            சமஸ்தங்களையும்,       மதியொன்றில் -
கேவலஞ்ஞானமொன்றினால்,     அடைந்தனை      - அடைந்தாய்,
கதிகணான்கையும் -   சதுர்க்கதிகளையும், கடந்தனை - தாண்டினாய்,
அகதியை -    மோட்ச     கதியை,     கதியின்றி - அதற்கு மேல்
கதியில்லாமல்,      அடைந்தனை - சேர்ந்தாய், துதிகள்நான்கையும் -
(அரகந்தசித்த   ஸாது    தர்மமென்கிற) சதுஸ்திகளையும், கடந்தது -
தாண்டியதாகிய,    ஓர்     -      ஒப்பற்ற,           துறவுடை -
பரத்திரவியாபேட்சையினீங்கின    சுத்தாத்துமதியானமான,    சுகத -
ஸௌக்கியமுடைய, எம்பெருமானே - எங்கள் தலைவனே, எ-று. (33)

174. உலக மூன்றையு மேந்திடு மாற்றலை யொருகணத துலகத்தின்
    அலகி னீளமு மகலமு முயரமு மணுவினா லளக்கிற்கும்
    இலகு தன்மையை யியல்பிலெவ் வுயிர்களு மியற்றுமத் தொழில்
                                             செய்து
    விலகி நின்றிடும் விசித்திரக் கிரியைநல் வீரிய விறல்வேந்தே.

     (இ-ள்.)   உலக  மூன்றையும் - மூவுலங்களையும், ஏந்திடும் -
தரித்திராநின்ற,  ஆற்றலை -ஞானசக்தியையுடையயாய்!, ஒருகணத்து -
ஒரு ஸமயத்தில்,    உலகத்தின்    -   உலகத்தினுடைய, அலகில் -
கணக்கில்லாத, நீளமும் -   நீளத்தையும், அகலமும் - அகலத்தையும்,
உயரமும், உன்னதத்தையும்,   அணுவினால்    -   பரமாணுவினாலே,
அளக்கிற்கும் -    அளக்கும்படியான,   இலகும் -   விளங்காநின்ற,
தன்மையை -   ஸ்வபாவமுடையாய்!, இயல்பில் - ஸ்வபாவகுணமாகிய
ஞான தரிசனத்தினது  முடிவில்லாத விருத்தியினால், எவ்வுயிர்களும் -
ஸகல ஜீவன்களும்,   இயற்றும் -  செய்கின்ற, அத்தொழில் - அந்தக்
காரியங்களை,    செய்து    -     பரமாக   மத்தினால் சகலருக்கும்
தெரியச்செய்து,  விலகிநின்றிடும்  - ஒன்றிலும் பற்றாமல் நீங்கிநிற்கும்,
விசித்திரக்கிரியை -    ஆச்சரியமாகிய   கிரியையையுடையாய், நல் -
நன்மையாகிய,     வீரிய     -     அனந்தவீரியமாகிய,    விறல் -
பராக்கிரமத்தையுடைய, வேந்தே - நாதனே, எ-று.             (34)