175. மறைகள் மாய்ந்திட வான்பொறி யைந்தையு
மாற்றிமற் றவற்றா லாம்
முறையு நீங்கமூ வுலகினோ டலோகின்முக்
காலத்தி னிகழ்வெல்லாம்
உறலு மோர்தலு மின்றியே யோர்கணத்
தொற்றுமை முதலாய
அறியு நின்னறி வறிவதோ ரறிவெமக்
கருள்செயெம் பெருமானே.
(இ-ள்.)மறைகள் - ஸ்வபாவகுணங்களை மறைக்கும் ஆவரணிய
கருமங்கள், மாய்ந்திட - நீங்க, வான் - பெரிதாகிய, பொறியைந்தையும்
- பஞ்சேந்திரியங்களையும், மாற்றி - விஷயங்களிற்செல்லாமல் தடுத்து,
மற்று - பின்னை, அவற்றால் - அவ்விந்திரியங்களால், ஆம் -
ஆகின்ற, முறையும் - கிரமமும், நீங்க - நீங்கிவிட, மூவுலகினோடு -
மூன்றுலகங்களோடு, அலோகின் - அலோகத்தினுடையவும்,
முக்காலத்தின் - பூத பவிஷ்ய வர்த்தமான மென்னும்
திரிகாலங்களினுடையவும், நிகழ்வெல்லாம் - நிகழ்ச்சிகளையெல்லாம்,
உறலும் - அடைதலும், ஓர்தலும் - நினைத்தலும், இன்றி - இல்லாமல்,
ஓர் கணத்து - ஒரு ஸமயத்தில், ஒற்றுமை முதலாய - ஸாமான்ய
முதலாகிய எல்லா விசேஷங்களையும், அறியும் - அறிகின்ற
(கேவலஞானமாகிய), நின்னறிவு - உனது ஸ்வபாவ ஞானமானது,
அறிவது - ஸகலத்தையும் அறியும்படியான, ஓர் -ஒப்பற்ற, அறிவு -
திவ்வியஞானமாகும், எம்பெருமானே - எங்கள் தலைவனாகிய
ஸ்வாமியே!, எமக்கு - எங்களுக்கு, அருள் செய் -
ஸ்வபாவகுணமாகிய அந்தச் சுத்த ஞானத்தைப் பெறும்படியாக
உபதேசம் பண்ணியருள்வாயாக, எ-று. (35)
176. பொறிக ளாறிலைம் புலத்தினாற் கதியின்முக் காலத் திருபோகத்
துறவியாவையு முற்றவின்பத்தினோடுனதின பந்தனையொப்பித்
தறியின் மற்றவை யணுவுமா காயமு மனையவுன் பேரின்பத்
துறைதி யுன்னைநீ யுன்னுளே யனுபவித் துலகவுத் தமனீயே.
(இ-ள்.) பொறிகள் ஆறில் - ஷடிந்திரியங்களில்,ஐம்புலத்தின் -
பஞ்ச விஷயங்களில், நாற்கதியின் - சதுர்க்கதிகளில்,முக்காலத்து -
மூன்று காலங்களில், இருபோகத்து - போகோப போகங்களில்,
உறவியாவையும் - (அநுபவியாநின்ற) ஸகல ஜீவன்களும், உற்ற -
அடைந்த, இன்பத்தினோடு - சௌக்கியத்தினோடு, உனது -
உன்னுடைய, இன்பந்தன்னை - சௌக்கியத்தை, ஒப்பித்து - ஒன்று
சேர்த்து, அறியின் - தெரியுமிடத்தில், மற்றவை - (ஸகலஸம்ஸாரப்
பிராணிகளுடைய) ஸுஹங்கள், அணுவும் - அணுவையும், ஆகாயமும்
- ஆகாயத்தையும், அனைய - நிகர்ப்பனவாம், (இத்தகைய) உன் -
உனது, |