சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 89


 

முழுமையும்,   கூடி   -   சேர்ந்து,   மறுவிலான் -  களங்கமில்லாத
முனிவரனது,  தவத்தின்தன்மை - தபஸினுடைய மேலான குணத்தினது,
பயத்தை -  பலனை,   நாம் -  நாங்கள், மதிக்கமாட்டா - மதித்தறிய
முடியாத, சிறியர் - அற்பர்கள், யாம் - அத்தகைய நாங்கள், செய்த -
இயற்றிய,  தீமை - பொல்லாங்குகளை, பெரியை - பெரியோனாகிய, நீ
- நீ,   பொறுக்கல்    வேண்டும்   - க்ஷமைபண்ணி யருளவேண்டும்,
இறைவனே  -  இச்சஞ்சயந்த   பகவானே,   எடுத்துக்  காட்டாம் -
எங்களால்   செய்யப்பட்ட   தீமைகளைப்பொறுத்து   உயர்ந்ததற்குத்
திருஷ்டாந்தமா   யிராநின்றார்,    என்று -  என்றுசொல்லி, அவர் -
அவ்வித்தியாதரர்கள்,  பணிந்து -  வணங்கி,  நின்றார் - நின்றார்கள்,
எ-று.                                                  (43)

184. புலியினைக் கண்டு போக்கற் றடைந்தபுல் வாய்கள் போல
    மெலியவ ருரைக்க நெஞ்சங் குழைந்துபா சத்தை நீக்கிப்
    பலரையும் போக விட்டிப் பாவியைச் சுற்றத் தோடு
    மொலிகட லிடுவ னென்னா வுடன்றவ னெழுந்த போழ்தில்.

     (இ-ள்.)  புலியினை - புலியை, கண்டு - பார்த்து, போக்கற்று -
நீங்கிப்போகச்  சக்தியற்று,   அடைந்த   -  அதனிடத்தில்  சேர்ந்த,
புல்வாய்கள்போல     -   மான்கூட்டங்களைப்போல,   மெலியவர் -
அற்பர்களாகிய   வித்தியாதரர்கள்,   உரைக்க  -  தரணேந்திரனிடம்
சொல்லி   வேண்டிக்கொள்ள,   நெஞ்சம்  - மனதானது, குழைந்து -
தளர்ந்து,  பாசத்தை -  நாகபாசத்தை,  நீக்கி - விலக்கி, பலரையும் -
அக்கூட்டத்தாராகிய பல பேர்களையும், போகவிட்டு - அனுப்பிவிட்டு,
இப்பாவியை -  இந்த  வித்துத்தந்தனை,   சுற்றத்தோடு -   இவனது
நெருங்கிய பந்துக்களுடன், ஒலி - அலைகளால் சப்தியாநின்ற, கடல் -
ஸமுத்திரத்தில்,  இடுவன் - போடுவேன், என்னா - என்று, உடன்று -
கோபித்து,   அவன் -   அத்தரணேந்திரன்,  எழுந்த   போழ்தில் -
உத்தேசித்தெழுந்த காலத்தில், எ-று.                        (44)

185. நீதிதா னத்தி னாலெண் வினைகளை வென்ற வீரன்
    பாததா மரைக ளேத்திப் பரிவிண்ணக் கிரியை முற்றி
    ஆதிதா பத்து நாமத் தமரனின் றவனை நோக்கிக்
    கோபதா பத்தை நீக்கிக் குணங்கொளக் கூறலுற்றான்.

     (இ-ள்.)   நீதிதானத்தினால்  -  வரிசைக்கிரமத்தினால்,  எண்
வினைகளை -  அஷ்ட கருமங்களையும், வென்ற  - ஜெயித்திராநின்ற,
வீரன்  -    சஞ்சயந்தபட்டாரகருடைய,          பாததாமரைகள் -
பாதகமலங்களை, ஏத்தி - ஸ்தோத்திரம்பண்ணி, பரிவிண்ணக்கிரியை -
பரிநிர்வாண பூஜையை, முற்றி - செய்து முடித்து, ஆதிதாபத்து நாமத்து
-  ஆதித்யாபனென்னும்    பெயரையுடைய,     அமரன் -    கல்ப
வாஸிதேவன்,     நின்றவனை   - இப்படிக்  கோபித் தெழுந்துநின்ற
தரணேந்திரனை,