90மேருமந்தர புராணம்  


 

நோக்கி  -  பார்த்து,  கோபதாபத்தை  -  கோபவெப்பத்தை, நீக்கி -
விலக்கி,   குணங்கொள - குணத்தையடையும்படியாக, கூறலுற்றான் -
சொன்னான், எ-று.                                       (45)

186. இவன்செய்த குற்ற மென்கொ லெருதுபோ லிருந்த வேழை
    இவன்செய்த போழ்திற் சால வருள்செய வேண்டு மன்றி
    இவன்றன்னை யனையா ருன்றன் கோபத்துக் கிடமு மல்லர்
    உவந்தின்ன மொன்று கேளா யுரைக்கின்றே னுரகர் கோவே.

     (இ-ள்.)  உரகர்கோவே  - வாராய ் தரணேந்திரனே!, இவன் -
இவனால்,   செய்த  - செய்யப்பட்ட, குற்றம் - தப்பிதம், என்கொல் -
என்ன,  எருதுபோல்  -   விருஷபத்தைப்போல், இருந்த - இராநின்ற,
ஏழை  -   அஞ்ஞானியாகும்,    இவன்     -   இப்படிப்பட்டவன்,
செய்தபோழ்தில்    -   (தப்பிதம்)  செய்தகாலத்தில், சால - மிகவும்,
அருள்செய்யவேண்டும்    -      தயவுசெய்யவேண்டும்,   அன்றி -
அதுவல்லாமலும்,      இவன்    தன்னை   யனையார் - இவனுக்குச்
சமானமானவர்கள்,      உன்தன்    - உன்னுடைய,  கோபத்துக்கு -
கோபத்திற்கு, இடமுமல்லர் - உரித்தானவர்களல்லர், இன்னமொன்று -
மற்றொரு சமாசாரம்,   உரைக்கின்றேன்  -  யான் சொல்லுகின்றேன்,
உவந்து - சந்தோஷித்து, கேளாய் - அதை நீ கேட்பாயாக, எ-று. (46)

187. ஆதிவே தத்து நாதன் புருவிந்த வுலக மேத்த
    நீதிமா தவத்தைத் தாங்கி நிறைந்தயோ கத்தி னின்ற
    போதினா தரத்தின் வந்தார் போகவா தரத்தி னார்கள்
    தீதிலாக் குணத்தி னார்கள் விநமியு நமியு மென்பார்.

     (இ-ள்.)   ஆதி    -     முதன்மையாகிய,     வேதத்து  -
வேதசாஸ்திரத்துக்கு,   நாதன்  -   முதல்வனாகிய,  புரு - விருஷப
தீர்த்தங்கரராகிய  ஆதிநாதன்,   இந்தவுலகம் - இந்த வுலகத்திலுள்ள
ஞானிகள்,   ஏத்த   -  ஸ்தோத்திரம்செய்ய, நீதி - நீதிவரிசையுடைய,
மாதவத்தை   -    மஹாதபஸை,    தாங்கி    - தரித்து, நிறைந்த -
நிறைவுபெற்ற,  யோகத்தின்  - பிரதிமாயோகத்திலே, நின்றபோதின் -
(காயோத்ஸர்க்கமாக)  நின்றகாலத்தில்,  தீதிலா - பொல்லாங்கில்லாத,
குணத்தினார்கள்     -    குணத்தையுடையவர்களாகிய,    விநமியும்
நமியுமென்பார்     -   விநமி  நமி    என்கிற   இருவர்கள், போக
வாதரத்தினார்கள்      -        போகோப        போகங்களிலே
பிரியத்தையுடையவர்களாய்,  ஆதரத்தின் - அப்பிரீதியினாலே, வந்தார்
- அவ்விடத்தில் வந்தார்கள், எ-று.                          (47)

188. வந்தவ ரிறைவன் பாதம் வலங்கொண்டு வணங்கி வாழ்த்தி
    அந்தமி னிதியு நாடு மரசருக் கீந்த வந்நாள்
    வந்தில மடிக ளின்றே வந்தன மண் ணெமக்குத்
    தந்தபின் னன்றிப் போகோ மென்றுதாழ்ந் தேத்தி னாரே.