சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 91


 

     (இ-ள்.)  வந்தவர்   -  வந்த  அக்குமாரர்கள்,   இறைவன் -
நாதனுடைய,  பாதம்  -  பாதங்களை,  வலங்கொண்டு - வலம்வந்து,
வணங்கி - நமஸ்கரித்து, வாழ்த்தி - ஸ்தோத்திரம்பண்ணி, அந்தமில் -
அளவில்லாத, நிதியும் - ஐஸ்வரியமும், நாடும் - தேசமும், அரசருக்கு
- இராஜர்களுக்கு,  ஈந்த   அந்நாள்   -  உம்மால் பகிர்ந்துகொடுத்த
அந்நாளில், வந்திலம் - நாங்கள் வரவில்லை, அடிகள் -ஸ்வாமிகளே!,
இன்றே - இப்பொழுதே, வந்தனம் - வந்தோம், எமக்கு - எங்களுக்கு,
மண் பூமிராஜ்ஜியம்    சிறிதாகிலும்,    தந்தபின்னன்றி   - உம்மால்
கொடுக்கப்பட்ட பின்னல்லது,போகோம் - நாங்கள் இவ்விடம் விட்டுப்
போகமாட்டோம்,  என்று   -  என்று  சொல்லி, தாழ்ந்து - பணிந்து,
ஏத்தினார் - ஸ்தோத்திரம் பண்ணினார்கள், எ-று.              (48)

வேறு.

 189. மூன்றுலக மேத்தவரு முத்திக் கிளவரசா
     யான்ற வணுத்தரத்து ளன்றமர்ந்தாய் நீயே
     யான்ற வணுத்தரத்து ளன்றமர்ந்து வந்தாயை
     மூன்றுலக மேத்திய வாறுசொல்ல முடியாதே.

     (இ-ள்.) மூன்றுலகம் - மூன்றுலோகத்திலுமுள்ள தேவராதியோர்,
ஏத்த   -  ஸ்தோத்திரம்பண்ண,   வரும்   - வராநின்ற, முத்திக்கு -
மோக்ஷத்திற்கு, இளவரசா  - யௌராஜ பதத்தையுடையவனே!, நீ - நீ,
ஆன்ற    -   மேலாகிய,  அணுத்தரத்துள் - பஞ்சாணுத்தரமென்னும்
அஹமிந்திர   வுலகத்தில்,   அன்று  - இதற்குமுன் ஜன்மங்கொண்ட
அக்காலத்தில்,  அமர்ந்தாய்   -  பொருந்தினாய், ஆன்ற - மேலான,
அணுத்தரத்துள் - பஞ்சாணுத்தரத்தில், அன்று - அப்போது, அமர்ந்து
- பொருந்தி,   வந்தாயை  -    இப்போது பூமியிலவதரித்த உன்னை,
மூன்றுலகம்   - இம்மூவுலகமும்,  ஏத்தியவாறு - ஸ்துதித்த விதத்தை,
சொல்லமுடியாது - எங்களால் வசனித்தல் முடியாததாகும், எ-று.

     ஸ்துதியாவது  :     ஸ்வர்க்காவதரண,         ஜம்மாபிஷேக,
கல்யாணங்களில் தேவர்கள் செய்த ஸ்தோத்திரங்கள்.          (49)

 190. அந்தரமொன் றின்றிவரு முத்திக் கிளவரசா
     மந்தரத்தின் மாண்ட சிறப்பமர்ந்தாய் நீயே
     மந்தரத்தின் மாண்ட சிறப்பமர்ந்து மண்ணுலகத்
     தந்தரத்தை நீக்கு மரசளித்தாய் நீயே.

     (இ-ள்.)  அந்தரமொன்று  -  யாதொரு  விக்கினமும், இன்றி -
இல்லாமல்,   வரும்   -   உண்டாகின்ற, முத்திக்கு - மோக்ஷத்திற்கு,
இளவரசா  -யௌராஜ்ஜிய பதவியையுடையவனே!, நீ - நீ, மந்தரத்தின்
- மஹம்மேரு பர்வதத்தில், மாண்ட -