96மேருமந்தர புராணம்  


 

200. என்றலு மென்னை மன்னர் மைந்தர்தம் பெருமை யென்னாச்
    சென்றவன் சென்னி சாய்த்திட் டிறைவன்றான் செப்பக் கேட்ட
    தொன்றுள தென்ப வன்போ லுருவுகொண் டதனி னீங்கி
    நின்றனன் முடியும் பூணு மாரமுங் குழையு மின்ன.

     (இ-ள்.)   என்றலும்  - என்று குமாரர் சொல்லவும், என்னை -
என்ன ஆச்சரியம்!,   மன்னர்  மைந்தர்தம்   - இராஜகுமாரர்களாகிய
இவர்களது,   பெருமை  - பெருமையானது, என்னா - என்று எண்ணி,
அவன் -   அத்தரணேந்திரன்,  சென்று    - ஸ்வாமியின் ஸமீபத்தில்
சென்று,    சென்னி   சாய்த்திட்டு   - தலையைச் சாய்த்து அசைத்து,
இறைவன் -   ஸ்வாமி,   செப்ப   -   சொல்ல,  தான்-, கேட்டது -
கேட்டறிந்ததாகிய,   ஒன்று   -  ஒருகாரியம், உளது - இருக்கின்றது,
என்பவன் போல் -  என்று தெரிவிப்பவன்போல நடித்து, அதனினீங்கி
- ஸ்வாமி  ஸமீபத்திற் சென்றிருந்ததாகிய அக்காரியத்தினின்றும் நீங்கி
வந்து,  உருவுகொண்டு   -  தனது சுய ரூபத்தை யெடுத்துக்கொண்டு,
முடியும்   -   மகுடமும்,    பூணும்   -   ஆபரணமும், ஆரமும் -
கழுத்திலணியும்   மாலைகளும்,   குழையும் - குண்டலமும், மின்ன -
பிரகாசிக்க, நின்றனன் - குமாரர்களுக் கெதிரில் நின்றான், எ-று.  (60)

201. முன்னைத்தன் னுருவங் காட்டி முனிவனீர் வேண்டிற் றீய
    வென்னையின் றருளிச் செய்தா னெழுகநீ ரென்னோ டென்று
    மின்னுமோர் விமான மேற்றி வேதண்ட மவரோ டெய்தி
    மன்னராய் நாட்டி யிட்டான் மலைமிசை யரசர்க் கெல்லாம்.

     (இ-ள்.)      (அப்படி    நின்ற      அவன்)    முன்னை -
குமாரர்களுக்கெதிரில், தன் - தன்னுடைய, உருவம் - ரூபத்தை, காட்டி
-காண்பித்து, முனிவன் - ஸ்வாமியானவன், நீர் - நீங்கள், வேண்டிற்று
- இச்சித்ததை,  என்னை - என்னை, ஈய - கொடுக்கும்படியாக, இன்று
- இப்பொழுது,       அருளிச்செய்தான்   - கடாட்சித்து      உரை
செய்தான்(ஆகையால்),   நீர் - நீங்கள்,  என்னோடு - என்னுடன்கூட,
எழுக என்று - வரக்கடவீராக என்று, மின்னும் - பிரகாசியாநின்ற, ஓர்
- ஒப்பற்ற,     விமானம்    -    விமானத்தில், - ஏற்றி, அவர்களை
ஏற்றிக்கொண்டு,     அவரோடு     -  அவர்களுடன், வேதண்டம் -
விஜயார்த்த பர்வதத்தை,    எய்தி    -     அடைந்து, மலைமிசை -
அப்பர்வதத்தின் மேலுள்ள, அரசர்க்கெல்லாம் - அரசர்களுக்கெல்லாம்,
மன்னராய் - அதிராஜர்கள்   ஆக,  நாட்டியிட்டான் - ஸ்தாபித்தான்,
எ-று.                                                  (61)

202. மனமலி வடக்கிற் சேடி யறுபதுக் கரச னாக
    வினமியை நாட்டிப் பூரம் கனகபல் லவத்தை யீந்தா
    னனையவை தெற்கிற் சேடி யைம்பது நமிக்கு மீந்து
    புனைவருஞ் சக்க வாள மிரதநூ புரத்தை வைத்தான்.