100மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)   மின்னினும்  -  மின்னலைப்பார்க்கிலும், மிகைநனி -
மிகவும் அதிகமாக,  தோன்றி   -  பிறந்து,   வீதலின்  - மரணத்தை
அடைவதில்,  முன்னை - அநாதியாகவே, மன்னிய - சேர்ந்திராநின்ற,
மூவுலகினுள்     -    மூன்றுலோகத்திலும்,   (உள்ள), உயிர்தமின் -
உயிர்களுள்,     மருவிலாதன     -   சேர்ந்த பந்துவல்லாதவைகள்,
இல்லையாயினும் - இல்லாமல் உறவாகவே யிருந்தபோதிலும், பின்னிய
- அப்படிச்   சேர்ந்திராநின்ற,   உறவிது - இந்தப் பந்துத்துவமானது,
பெரிதும்       -       மிகவும்,      இல்லை   -    சாஸ்வதமாக
நிலைத்திருக்கப்பட்டதில்லை, எ-று.                          (69)

210. உற்றவ ரேயுறு பகைஞ ராகுவர்
    செற்றவ ரேசிறந் தாரு மாகுவர்
    மற்றவ ரேமறித் திரண்டு மாகுவர்
    அற்றவ ரொருவரிங் காரு மில்லையே.

     (இ-ள்.)   உற்றவரே   -    (இந்த ஜன்மத்தில்)   பந்துவாகப்
பொருந்தினவர்களே,   (மறுஜன்மத்தில்),   உறு    - அடையப்பட்ட,
பகைஞராகுவர்   - சத்துருக்களாவார்கள், செற்றவரே - பகைவர்களே,
சிறந்தாரு      மாகுவர்     -      சிறப்பையுடைய   பந்துக்களும்
மித்திரர்களுமாவார்கள்,  மற்றவரே - பகையாளிகள் உறவாளிகளாகிய
அவ்விருவருமே,  மறித்து - திரும்பவும், இரண்டுமாகுவர் -அப்படியே
இரண்டு    விதமாகவும்   பிறந்தாலும் பிறப்பார்கள், (ஆகையினால்),
அற்றவர்   -   சத்துருமித்துருவல்லாதவர்களாகிய, ஒருவர் - ஒருவர்,
இங்கு  இந்த ஸம்ஸாரத்தில், ஆரும் - எவரும், இல்லை - இலராவர்,
எ-று.                                                 (70)

211. அரசர்க ளேயரு நரக ராகுவர்
    நரகர்க ளேநல வரச ராகுவர்
    சுரரவ ரேதொழு புலைய ராகுவர்
    நரரவ ரேகரு நாயு மாகுவர்.

     (இ-ள்.)    அரசர்களே     -  இராஜாக்களே,  அரு - அரிய
துன்பத்துக்கிடமாகிய,   நரகராகுவர் -  நரகர்களாகவும் பிறப்பார்கள்,
நரகர்களே - நரகர்களானவர்களே, நல்ல - நன்மையான, அரசராகுவர்
- இராஜாக்களகவும்  பிறப்பார்கள், சுரரவரே - தேவர்களே, தொழு -
தொழுநோயையுடைய,   புலையராகுவர்    -     கீழ்   மக்களாய்ப்
பிறப்பார்கள்,    நரரவரே -   மனுஷ்யர்களானவர்களே, கரு - கரிய,
நாயுமாகுவர் - நாயாகவும் பிறப்பார்கள், எ- று.                (71)

212. மங்கைய ரேமண வாள ராகுவர்
    தங்கைய ரேமறுத் தாயு மாகுவர்
    அங்கவ ரேயடி யாரு மாகுவர்
    இங்கிது பிறவிய தியல்பின் வண்ணமே.