பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 109


 

     மற்ற தன்கண் வணிகொரு வன்னுளன்
     சொற்க டந்த கொடைக்கைச் சுதத்தனே.

     (இ-ள்.)  பத்மசங்க  நிதிக்கு  -  பத்மநிதி  சங்கநிதி  என்கிற
நிதிகளுக்கு,    இடமாயது    -    ஸ்தானமாயிரா     நின்றதாகிய,
பத்மசண்டமென  -  பத்மஷண்ட  மென்று,  பகர் - சொல்லப்பட்ட,
மா  -  பெரிய,  நகரதன்கண்  -  பட்டணத்தில்,  சொல்  கடந்த -
வித்துவான்களால்   சொல்லப்படும்   உரைக்கடங்காது   மேற்பட்ட
(அதாவது : அளவில்லாத), கொடை - தியாகம்  கொடுத்தலையுடைய,
கை    -    கையுள்ள,     சுதத்தன்     -     ஸுதத்தனென்னும்
பெயரையுடையவனாகிய,  வணிகொருவன்  -  ஒரு  வணிகனானவன்,
உளன் - இருப்பவனானான், எ-று.

     வணிகம்   என்னும்    வியாபாரத்தின்   பெயர்   விகுதிகுன்றி
வணிகுஎன   நின்றது;   இஃதாகு பெயராய் வணிகனை யுணர்த்திற்று.
மற்று - அசை.                                           (7)

 231. மற்ற வன்றன் மனைக்கு விளக்கனாள்
     சுற்ற நன்மையி னாமஞ் சுமித்திரை
     விற்கு னிப்புரு வத்தொளிர் வேற்கணாள்
     கற்ப லர்ந்தவோர் காமரு வல்லியே.

     (இ-ள்.)  மற்று - பின்னை, அவன்தன் - அந்தச் சுதத்தனுடைய,
மனைக்கு - வீட்டிற்கு, விளக்கனாள் - தீபம்போல் பிரகாசிப்பவளாகிய
மனையாளானவள்,  வில்   -  வில்லைப்போல,  குனி  -  வளைந்த,
புருவத்து -  புருவத்தையும், ஒளிர் - பிரகாசியா நின்ற, வேல் - வேல்
போன்ற,   கணாள்   -   கண்களையும்   உடையவளாகிய,  கற்பு -
பதிவிரதாகுணம், அலர்ந்த  -  உண்டாகி  யிராநின்ற, ஓர் - ஒப்பற்ற,
காமர் - அழகு பொருந்திய, வல்லி - பூங்கொடி போன்றவள்,  சுற்றம்
- பந்துக்களுக்கு,  (அவள் செய்யும்)  நன்மையின்  -  நன்மையினால்,
(அவளுக்கேற்பட்ட) நாமம்  -  பெயரானது, சுமித்திரை - ஸுமித்திரை
யென்பதாகும், எ-று.

     காமரு என்பதில் உ - சாரியை.                         (8)

 232. அந்தி யும்மகல் வானுமுன் னாளினால்
     இந்து வைப்பயந் தாங்கவ் விருவரும்
     மைந்த னைப்பயந் தார்மதி போல் வளர்ந்
     தந்த மில்லுவ கைக்கிட மாயினான்.

     (இ-ள்.) அந்தியும் - ஸந்தியாதேவியும்,  அகல் - விசாலமாகிய,
வானும் - ஆகாயமும்,  முன்னாளினால் - பூர்வபட்சத்தில்,  இந்துவை
- பாலச்சந்திரனை,  பயந்தாங்கு - பெற்றதைப்போல, அவ்விருவரும் -
அந்த இரண்டு பேர்களும்,  மைந்தனை  -  குமாரனை,   பயந்தார் -
பெற்றார்கள், (அப்புதல்வன்) மதிபோல் - சந்திர