யுடையவர்களென்னும், புங்கவர்க்கு - சிரேஷ்டர்களுக்கு,
இறைவன் -
எஜமானாகிய ஜிநேஸ்ரீவரனது, சிறப்பு - பூஜை, முன்பு - பிரதமத்தில்,
இலாதன - செய்யப்படாதனவாகிய,
மங்கலத்தொழில்கள் -
சுபகார்யங்கள், இல்லை-, அந்த நாடெங்கும் - அத்தேச முழுவதிலும்,
(உள்ள) யாவரும் - சகலரும், மெய் - உண்மையாக, இறைஞ்சி
-
வணக்கத்தை யுடையவர்களாகி, ஒழுகலால் - நடக்கிறபடியால், மானம்
- கர்வமும், மாயம் - மாய்கையும், இல்லை - அத்தேசத்தில் கிடையா,
எ-று. (21)
22. நடுக்கடற் பிறந்தசங்கி னுள்ளிருந்த பாலினற்
குடிப்பிறந்த மைந்தர்தங் குழைமுகம் பிறர்மனை
யிடைக்கண்வைத்த லில்லைகாத லார்கள்மேலு மார்வமூர்
கடைக்கணோக் கிலாதமாதர் கற்பையாவர் செப்புவார்.
(இ-ள்.) நடுக்கடல் - நடுச்
சமுத்திரத்தில், பிறந்த - உற்பவித்த,
சங்கினுள் - சங்கினுள்ளே, இருந்த - உண்டாகியிராநின்ற, பாலின் -
வெண்மையைப் போல் (சுத்தமாகிய), நற்குடிப்பிறந்த -
உயர்ந்த
குடியில் பிறந்த, குழை - கர்ணகுண்டலத்தை யணிந்திராநின்ற, முகம் -
முகத்தையுடைய, மைந்தர் - புருடர்கள், தம் - தங்களுடைய, கண் - நேத்திரத்தை,
பிறர்மனையிடை - அன்னிய மாதர்மேல், வைத்தலில்லை
- ஸ்தாபித்து மனம் வைப்பதில்லை,
காதலார்கள்மேல் -
வாஞ்சையையுடைய தங்கள் புருடர்கள்மேல்,
ஆர்வமூர் -
ஆசைமேலிடுகின்ற, மாதர் - ஸ்திரீகள், கடைக்க ணோக்கிலாத
-
அன்னிய புருடர்களைக் கடைக்கணித்துப் பாராத,
கற்பை -
அவர்களின் பதிவிரதா குணத்தை, யாவர் - எவர்கள், செப்புவார்
-
அளவிட்டுச் சொல்லுவார்கள்? எ-று.
மேலும் என்பதில் உம்மை - அசை நிறைப்பொருளது;
இன்னும்
அதனை உயர்வு சிறப்பும்மையாகக்கொண்டு, ‘காதலர் மேலும் ஆசை மேலிடுகின்ற கடைக்
கண் ணோக்கஞ் செய்யாத?, எனப் பொருள்
கூறினும் அமையும்; ‘காதலரையும் ஆசையோடு நோக்காதவர்?,
எனவே, அவர்கள் நிலையற்ற சிற்றின்பத்தைப்
பெரிதாகப்
பாராட்டாதவரென்பது பெறப்படும்; அதனால் அவர்களின் கற்பின்
உயர்வு இன்னும் விசேஷித்து நிற்கும். (22)
23. அணியினுக் கணியனார்க ளாடுமா மயிலனார்
மணியைமண்ணி வைத்தனார்கள் வஞ்சமின் மனத்தினார்
பணிவிலா வொழுக்கினார்கள் பண்ணவர்ப் பழிச்சுவார்க்
கணிகைமாதர் சீலமின்ன காமுறுந் தகையவே.
(இ-ள்.) கணிகைமாதர்
- அந்நாட்டில் உள்ள வேசியர்கள்,
அணியினுக்கு - அழகுக்கெல்லாம், அணியனார்கள் -
அழகைச்
செய்வாரைப் போன்றவர்கள்; ஆடும் - நர்த்தனம் பண்ணும், மா
-
பெருமையுடைய, மயிலனார் - மயில்போன்ற |