பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 111


 

 235. படங் கடந்தணி தங்கிய வல்குலுங்
     குடங்கை யேயள வுள்ள கொழுங்கணும்
     வடஞ் சுமந்தெழு கொங்கையு மங்கையர்
     நுடங்கு நுண்ணிடை யுண்ணுகர் வெய்தினான்.

     (இ-ள்.)   மங்கையர்    -    உரியமாதர்களுடைய,    படம் -
ஸர்ப்பத்தினது  பணா  முடியை,   கடந்து  -  (உருவத்தினால்  மீறி)
ஜெயித்து,   அணி  தங்கிய  -  அழகு   பொருந்திய,  அல்குலும் -
கடிதடமும்,   குடங்கையேயளவுள்ள   -   விசாலமாய்  உள்ளங்கை
யளவாகிய,  கொழும்  -  கொழுமையாகிய, கண்ணும் - நேத்திரமும்,
வடம்  -  முத்துவடம்  முதலானவைகளை, சுமந்து - தரித்து,  எழு -
நிமிர்ந்திருக்கின்ற,   கொங்கையும்   -    குயங்களும்,   நுடங்கும் -
அசையும்படியான,  நுண்  -  மெல்லிய,  இடை - இடையும், (ஆகிய
அங்கங்களின்)  நுகர்வு -  அனுபவத்தை, உள் - மனத்தின் கண்ணே,
எய்தினான் - அடைந்தான், எ-று.

     குடங்கையே என்பதில், ஏ - அசை.                    (12)

 236. வளஞ் சுருங்கிடின் மாநிதி யும்பலோ
     ரளந்து கொண்டுண லாம்படி தானெழ
     லுளஞ்செய் தூதிய முள்பொருள் கொண்டுபோய்
     விளங்கு மாமணித் தீவது மேவினான்.

     (இ-ள்.)  வளம்  -  பொருள்   வருவாயாகிய   வளப்பமானது,
சுருங்கிடின்  -  குறையுமேயானால், மாநிதியும் - (ஒருவனிடமிருக்கும்)
பெரிதாகிய     திரவியமும்,   பலோர்    -  சுற்றத்தார்   பலரும்,
அளந்துகொண்டு   -  அளவிட்டுக்  குறைவாகக்  கொண்டு,  உணல்
ஆம்  -  உண்ணும்படியாகிய  தன்மை  ஆகும் (அதாவது : பொருள்
அதிகமிருந்தாலும்  மேல்வருவா  யில்லையேல்  அதனை யெல்லாரும்
குறைவாக    அளந்தெடுத்துண்ணும்கஷ்டமுண்டாகும்;     ஆதலின்),
ஊதியம்    ஆம்படி   -   மேலும்   வருவாயுண்டாகும்படி, தான் -
அப்பத்திரமித்திரனான     வணிகன்,     எழல்     உளஞ்செய்து -
வியாபாரஞ்செய்யக்  கப்பல்  யாத்திரைபோக  உத்தேசித்து,   உள் -
தன்னிடமிராநின்ற,   பொருள்    -    பண்டங்களை,    கொண்டு -
கப்பலிலேற்றிக்கொண்டு,    போய்    -    சென்று,    விளங்கும் -
பிரகாசியாநின்ற,   மா - பெரிய,   மணித்தீவது - இரத்தினத்வீபத்தை,
மேவினான் - அடைந்தான், எ-று.

     ‘ஆம்" என்பது இரண்டிடத்துங் கூட்டப்பட்டது.            (13)

 237. சென்று சாத்தோடத் தீவினைச் சேர்ந்தவன்
     ஒன்றும் வாணிபத் தாற்பெற்ற வூதியம்