(இ-ள்.)
தக்க தொன்று - ஒரு தகுதியான காரியமாம், இவன் -
இவனுடைய, கை - கையிலே, பொருள் - நமது பொருளை, வைத்தல்
என்று - வைப்பதென்று, அக்கணத்து - அப்பொழுது, ஒருபாகுடம் -
ஒருமரியாதைப்பொருளை, ஈந்தபின் - கொடுத்தபிற்பாடு,
மிக்க -
மிகுதியாகிய, மாசனம் - மஹாஜனங்கள், வீந்ததோர் போழ்தினில் -
நீங்கினதோர்காலத்தில், தொக்க - சேர்ந்திராநின்ற,
தன்கருமம் -
தனதுகாரியத்தை, சொல்ல -
உரைக்க, மற்றவன் -
அம்மந்திரியானவன், எ-று.
(22)
246. வைத்தல் கோடல் வழங்கிடன் மாய்த்திடல்
துய்த்தல் மாற்ற லிருந்த விடஞ் சொலல்
இத்தி றத்துப் பிறன்பொருள் மேற்செலச்
சித்தம் வைத்தலும் தீவினைக் கேதுவே.
(இ-ள்.) வைத்தல்
- வைக்கிறதும், கோடல் - எடுத்துக்
கொள்வதும், வழங்கிடல் - பிறருக்குக் கொடுத்து
விடுகிறதும்,
மாய்த்திடல் - நாசஞ்செய்து குறையப்பண்ணுவதும், துய்த்தல் - தான்
அனுபவிப்பதும், மாற்றல் -
வேறொன்றாக மாற்றிவிடுவதும்,
இருந்தவிடம் சொலல் - இருக்கின்ற விடத்தைச் சொல்வதும், (ஆகிய)
இத்திறத்து - இப்போது சொன்னவகையினால்,
பிறன் -
அன்னியனுடைய, பொருள்மேல் - திரவியத்தின் மேலே, செல்ல
-
செல்லும்படி, சித்தம் வைத்தலும் - மனத்தினால்
நினைப்பதும்,
தீவினைக்கு - பாவவினைக்கு, ஏதுவாம் - காரணமாகும், எ-று. (23)
247. என்ற லும்பணிந் தானுக் கியாவரும்
நின்றி டாப்பொழு தென்கையி னீட்டென
அன்ற வன்கை யரும்பொருள் வைத்தபின்
முந்தை யூர்புக மொய்ம்பனு மேவினான்.
(இ-ள்.) என்றலும் - என்று
மந்திரி சொல்லவும், பணிந்தானுக்கு
- (அதைக் கேட்டு ஸ்வாமி அப்படியாவென்று)
வணங்கிய
பத்திரமித்திரனுக்கு, யாவரும் - எவர்களும், நின்றிடாப்பொழுது
-
இங்கில்லாமல் நீங்கி நான் தனியாயிருக்குங் காலத்தில், என் கையில்
- எனது கையில், நீட்டென - (உன் பொருளைக்) கொடுவென்று
மந்திரி சொல்ல, அன்று - அப்பொழுது, அவன் கை - அம்மந்திரி
கையில், அரும் பொருள் - அரிதாகிய பொருள்களை, வைத்தபின் -
வைத்த பிற்பாடு, மொய்ம்பனும் -
வல்லமையையுடைய
பத்திரமித்திரனும், முந்தையூர் - முன் தனது வாஸமாகிய பத்மஷண்ட
புரத்தை, புக - அடைய, மேவினான் - பொருந்திப் புறப்பட்டான்,
எ-று.
(24)
248. வேய்கள் வெந்து வெடித்திடு மோசையும்
பாய கள்ளி பரற்பொடி யோசையும் |