116மேருமந்தர புராணம்  


 

     ஆயர் தங்குழ லோசையு மாலைகள்
     பாயு மோசையும் பாய்விரி யோசையும்.

     (இ-ள்.) (அவ்வாறு புறப்பட்டு) வேய்கள் - மூங்கில்கள், வெந்து
- அக்கினியினால் வெந்து,  வெடித்திடும் - வெடிக்கின்ற,  ஓசையும் -
குறிஞ்சிநில    சப்தமும்,  (நிர்ஜலப்  பிரதேசமாகிய  பாலை நிலத்தில்
வெயிலால்   வெடித்து)  பாய  -  பரந்த,  கள்ளி  -  கொடிக்கள்ளி
இலைக்கள்ளி திருகுகள்ளி முதலாகிய கள்ளிகளும், பரல் - பருக்கைக்
கற்களும், பொடியோசையும் - பொடியாகின்ற சப்தமும்,  ஆயர்தம் -
ஆடுமாடுகள்  மேய்க்கின்ற   இடையர்களுடைய,   குழலோசையும் -
முல்லை  நிலத்திலுண்டாகிய புள்ளாங்குழலின் சப்தமும், ஆலைகள் -
இட்சு  யந்திரங்களினால், பாயும் - பரந்த,  ஓசையும் - மருதநிலத்தின்
சப்தமும்,  பாய்விரி  - கப்பலில்  பாய்விரித்துக் கட்டும்,  ஓசையும் -
நெய்தனிலத்தின் சப்தமும், எ-று.                            (25)

 249. இன்ன வோசை யியம்ப நிலந்தொறும்
     பன்ன ரும்பத்ம சண்டம தெய்தினான்
     மன்னுஞ் சுற்றமெ லாம்வரக் கொண்டுபோய்த்
     துன்னி னான்சீய புரமது தோன்றலே.

     (இ-ள்.) (ஆகிய) இன்ன - இத்தன்மையான, ஓசை - சப்தங்கள்,
நிலந்தொறும்   -   பஞ்ச   நிலங்கள்  தோறும்,  இயம்ப - சப்திக்க,
(அந்நிலங்களைக்   கடந்துபோய்)   பன்னரும்   -  சொல்லுதற்கரிய,
பத்மசண்டமது  - பத்மஷண்ட  புரத்தை, எய்தினான் - அடைந்தான்,
(அங்ஙனம் அடைந்த பின்னர்), தோன்றல் - பெருமையிற்சிறந்தவனான
அப்பத்திரமித்திரன்,   மன்னும்   -   சேர்ந்திராநின்ற, சுற்றமெலாம் -
பந்துக்களெல்லாம், வரக்கொண்டு - வரவழைத்துக்கொண்டு,  போய் -
போகி, சீயபுரமது - ஸிம்ம மஹா புரத்தை, துன்னினான் - சேர்ந்தான்,
எ-று.                                                 (26) 

 250. வழிவருத்த மொழித்தவன் வான்கிளைக்
     கழிவி லாதவின் பத்தை யளித் திரீஇத்
     தொழுத கைசென் றமைச்சனைத் துன்னிநின்
     றெழில்பெ றச்சில வின்மொழி கூறினான்.

     (இ-ள்.)    (அங்ஙனம்     சேர்ந்த     பின்பு)     அவன் -
அப்பத்திரமித்திரன்,     வான்     -     பெரிதாகிய,   கிளைக்கு -
சுற்றத்தார்களுக்கு,  வழிவருத்தம்  -  வழிநடைச்சிரமத்தை, ஒழித்து -
நீங்கி,  அழிவிலாத - கெடுதலில்லாத,  இன்பத்தை - ஸௌக்கியத்தை,
அளித்து  -  கொடுத்து,   இரீஇ   -   (அந்நகரில்   வாழும்படியாக
அவர்களை)    இருத்தி,    தொழுதகை   -   யாவர்களுங்   கண்டு
வணங்கும்படியான   குணத்தையுடைய   பத்திரமித்திரன்,   சென்று -
போய், அமைச்சனை - மந்திரியிடம், துன்னி - சேர்ந்து,