பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 117


 

நின்று - எதிரில் நின்று,  எழில்பெற - மேன்மை படும்படியாக, சில -
சிலவாகிய,   இன்மொழி   -   இனிய   வசனங்களை,  கூறினான் -
சொன்னான், எ-று.                                       (27)

 251. செப்ப மும்புக ழும்மறி வுஞ்சிதைத்
     தொப்பி லாத பிறப்பை யுடைத்திடா
     செப்பி னன்மணி மேன்மனஞ் சிக்குணா
     ஒப்பி லாத வுரைப்பதற் கூக்கினான்.

     (இ-ள்.)  (அப்போது  மந்திரி)  செப்பமும்  - நடுநிலையையும்,
புகழும்  -  கீர்த்தியையும்,  அறிவும்  -  ஞானத்தையும், சிதைத்து -
கெடுத்து,  ஒப்பில்லாத  - உவமையில்லாத,  பிறப்பை - இம்மனுஷ்ய
ஜன்மத்தையும், உடைத்திடா - நாசஞ்செய்து, செப்பின் - செப்புக்குள்
வைத்திராநின்ற, நல் - நன்மையான,  மணி மேல் - பத்திரமித்திரனது
இரத்தினங்களின்பேரில்,  மனம்  -  தனது  மனமானது,  சிக்குணா
- அகப்படுத்தப்பட்டு,  (அதாவது  அவற்றை   விரும்பி),  ஒப்பிலாத -
இசையாத வார்த்தைகளை, உரைப்பதற்கு - சொல்வதற்கு, ஊக்கினான்
- உத்ஸாஹித்தான், எ-று.                                  (28)

 252. மாயஞ் செய்த மரச்செப் பனையவன்
     மாய மில்லவன் றன்மணி ச் செப்பினை
     மாயஞ் செய்து கொளற்கு மனத்தெணா
     மாய மேசில வார்த்தையுஞ் செப்பினான்.

     (இ-ள்.) (அவ்வாறு  சொல்லத்  தொடங்கி)  மாயஞ்  செய்த -
மாய்கையினாலே  செய்யப்பட்ட,  மரச்  செப்பனையவன் - மரத்தின்
செப்பிற்    கொப்பவன்,   (அதாவது :   கருமமதிகரித்து    ஞானங்
குறைந்தவன்),    மாயமில்லவன்    தன்   -  மாயாச்   சாரமில்லாத
பத்திரமித்திரனது,  மணிச் செப்பினை - இரத்தினச் செப்பை,  மாயஞ்
செய்து - வஞ்சனை செய்து,  கொளற்கு - ஸ்வீகரித்துக் கொள்வதற்கு,
மனத்து - மனதில், எணா - எண்ணி, மாயமே - பொய்யாகவே, சில -
சிலவாகிய,  வார்த்தையும்  -  வசனங்களையும்,  செப்பினான்  - (கீழ்
வருமாறு) சொன்னான், எ-று.

 253. எங்கு நீயுளை யாவனீ மற்றுநீ
     எங்குப் போவ தெனச்சொல வேந்தலும்
     வங்க மீதுவந் தன்று மணிச்செப்புத்
     தங்கை தந்துபோம் வாணிக னானென்றான்.

     (இ-ள்.) நீ - நீ, எங்கு - எவ்விடம்,  உளை - இருக்கின்றாய், நீ
யாவன் - நீ யார்,  மற்று - பின்னை,  நீ எங்குப்போவது - நீ எங்குப்
போகின்றாய்,  என  -  என்று,  சொல்ல - மந்திரிகேட்க, ஏந்தலும் -
(பெருமையிற் சிறந்தவனாகிய)